படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார விவகாரம் தொடர்பில், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரை சர்வமதக் குழு சந்திப்பு

🕔 December 6, 2021

– அஷ்ரப் ஏ சமத் –

லங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார தியவதன பாகிஸ்தானில் கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கையிலுள்ள சர்வமதத் தலைவா்களைக் கொண்ட குழுவினர், இன்று திங்கட்கிழமை (6) பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமத்தை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பு உயர் ஸ்தானிகள் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாகிஸ்தான் நாட்டில் பொறியியலாளர் பிரியங்க குமார  கொலை செய்யப்பட்டமை தொடர்பில், மதத் தலைவர்கள் தமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தனர்.

கலாநிதி ஹசன் மௌலானா தலைமையிலான மேற்படி சர்வமத குழுவில் இடம்பெற்றிருந்த இந்துமத இணைப்பாளர் கலாநிதி பாபுசர்மா, முஸ்லிம் சமய இணைப்பாளர்  கலாநிதி ஹசன் மௌலானா, கிறிஸ்த்தவ மத இணைப்பாளர் கலாநிதி குருக்குலசூரிய மற்றும் பௌத்த மதகுருக்களும் இச்சந்திப்பின்போது, தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

பாகிஸ்தானும் அதன் ஆட்சியாளர்களும் இலங்கைக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவி வருகின்றமையினைச் சுட்டிக்காட்டிய சர்வ மதக் குழுவினர், பாகிஸ்தான் – இலங்கை நட்புறவு தொடர்ந்தும் பேணப்படல் வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தினர்.

மேலும் இந் கொலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் பிரதமர் உனடியாகப் பேசி நடவடிக்கைகள் எடுத்திருந்தமையினையும் இதன்போது குழுவினர் பாராட்டினர்.

அத்துடன் கொலை செய்யப்பட்ட குடும்பத்துக்கு அனுதாபத்தினை தெரிவிப்பதற்கு கனேமுல்ல கிராமத்துக்கு வருமாறும் உயர்ஸ்தானிகருக்கு சர்வமதக் குழுவினர் அழைப்பு விடுத்தனர். இதற்கு உயர்ஸ்தானிகர் உடன்பட்டார்.

அத்துடன் எதிா்காலத்தில் பிரியந்த குமாரவின் பிள்ளைகளுக்கு கல்வியை மேற்கொள்வதற்காக, பாகிஸ்தான் புலமைப் பரிசில் வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் இதன்போது கூறினார்.

கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு நஸ்டஈடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சந்தேக நபர்கள் சுமார் 200 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் ஆஜா் படுத்தியுள்ளதாகவும் அவா்களுக்கான தண்டனையை நீதிமன்றம் வழங்கும் எனவும் இதன்போது தூதுக்குழுவிடம் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்