மிதப்புப் பாலம் மூழ்கியதில் பிஞ்சுகள் உட்பட 06 பேர் பலி: குறுஞ்சாக்கேணியில் சோகம்

மிதப்புப் பாலம் மூழ்கியதில் பிஞ்சுகள் உட்பட 06 பேர் பலி: குறுஞ்சாக்கேணியில் சோகம் 0

🕔23.Nov 2021

திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் மிதப்புப்பாலம் மூழ்கியதில் அதில் பயணம் செய்தவர்களில் 06 பேர் உயிரிழந்துள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 04 சிறுவர்களும் அடங்குவதாகக் கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களில் நான்கு பேருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. அங்கு பாலம்ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள்

மேலும்...
முஷாரப், இஷாக், அலிசப்ரி ரஹீம்; கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்: மக்கள் காங்கிரஸ் அதிரடித் தீர்மானம்

முஷாரப், இஷாக், அலிசப்ரி ரஹீம்; கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்: மக்கள் காங்கிரஸ் அதிரடித் தீர்மானம் 0

🕔22.Nov 2021

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கட்சியின் தீர்மானத்தை மீறி, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை காரணமாக, இவர்கள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.எம். முஷாரப்,

மேலும்...
பட்ஜட்: தனித்துப் போன முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்; ‘கல்தா’ கொடுத்தார்கள் உறுப்பினர்கள்

பட்ஜட்: தனித்துப் போன முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்; ‘கல்தா’ கொடுத்தார்கள் உறுப்பினர்கள் 0

🕔22.Nov 2021

– முன்ஸிப் அஹமட் – வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதில்லை என பிரதான முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்து அறிவித்திருந்த போதிலும் அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்டு, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

மேலும்...
பட்ஜட்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வென்றது

பட்ஜட்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வென்றது 0

🕔22.Nov 2021

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன், 11 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு கடந்த 12ஆம் திகதி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த

மேலும்...
பட்ஜட்டுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறார் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் அஸீஸ்:  கல்முனைக்கே அவமானம் அஸீஸின் அறிக்கை: ஜவாத்

பட்ஜட்டுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறார் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் அஸீஸ்: கல்முனைக்கே அவமானம் அஸீஸின் அறிக்கை: ஜவாத் 0

🕔22.Nov 2021

– நூருல் ஹுதா உமர் – நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்து ஆதரவாக மு.காங்கிரஸின் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் கோரிக்கை விடுத்துள்ளார். வரவு

மேலும்...
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஞ்சனிடம் கைத்தொலைபேசி உள்ளிட்டவை மீட்பு

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஞ்சனிடம் கைத்தொலைபேசி உள்ளிட்டவை மீட்பு 0

🕔22.Nov 2021

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கைத்தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். தற்போது வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கைத்தொலைபேசி மற்றும் ‘ஹேண்ட்ஸ்ஃப்ரீ’ ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் சிறைச்சாலை பேச்சாளர் கூறியுள்ளார். இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்க, மக்கள் காங்கிரஸ் முடிவு: மூன்று எம்.பிகள் இல்லாத நிலையில் ஏகமனதாக தீர்மானம்

வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்க, மக்கள் காங்கிரஸ் முடிவு: மூன்று எம்.பிகள் இல்லாத நிலையில் ஏகமனதாக தீர்மானம் 0

🕔22.Nov 2021

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியின் அரசியல் அதிகாரசபைக் கூட்டம் நேற்று (21) கொழும்பில் நடைபெற்ற போது, மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய (22ஆம் திகதி) வாக்கெடுப்பிலும், டிசம்பர்

மேலும்...
சீன சேதனப் பசளை  விவகாரம்; சர்ச்சையிலிருந்து பின்வாங்க அரசாங்கம் முடிவு: நஷ்டஈடு வழங்கவும் தயார்

சீன சேதனப் பசளை விவகாரம்; சர்ச்சையிலிருந்து பின்வாங்க அரசாங்கம் முடிவு: நஷ்டஈடு வழங்கவும் தயார் 0

🕔21.Nov 2021

சீனாவின் சர்ச்சைக்குரிய சேதன உர விவகாரத்தில் பின்வாங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. சீன நிறுவனமொன்றிடமிருந்து இலங்கை நோக்கி கப்பலொன்றில் அனுப்பப்பட்டிருந்த சேதன உரத்தில் ஆபத்தான நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து, அந்த உரத்தை இலங்கை நிராகரித்தது. இதனையடுத்து ஏற்பட்ட சர்ச்சையில் குறித்த சீன நிறுவனம் நஷ்டஈடாக 08 மில்லியன் அமெரிக்க

மேலும்...
மத்திய வங்கிக்கு உதவி ஆளுநர்கள் நால்வர் நியமனம்

மத்திய வங்கிக்கு உதவி ஆளுநர்கள் நால்வர் நியமனம் 0

🕔21.Nov 2021

இலங்கை மத்திய வங்கிக்கு நான்கு உதவி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் நடைபெற்ற நாணயச் சபைக் கூட்டத்தில், மத்திய வங்கியின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் உதவி ஆளுநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. கே. ஜி. பி. சிறிகுமார, டி. குமாரதுங்க, யு. எல். முதுகல மற்றும் சி. பி. எஸ். பண்டார ஆகியோர்

மேலும்...
பட்ஜட்டுக்கு ஆதரவில்லை; மு.கா தீர்மானம்: 03 எம்.பிகளுக்கு சுகயீனம் என்பதால், உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

பட்ஜட்டுக்கு ஆதரவில்லை; மு.கா தீர்மானம்: 03 எம்.பிகளுக்கு சுகயீனம் என்பதால், உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை 0

🕔21.Nov 2021

– முன்ஸிப் – நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிப்பதில்லை என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியின் உயர்பீடக் கூட்டம் இன்று (21) கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் உட்பட அந்தக் கட்சியின்

மேலும்...
தங்க முட்டையிடும் வாத்தை, அறுத்துத் தின்றவனின் கதை

தங்க முட்டையிடும் வாத்தை, அறுத்துத் தின்றவனின் கதை 0

🕔20.Nov 2021

– மரைக்கார் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தொடர்பில், அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமையினையும், அதற்கு எதிராாக முஷாரப் ஆதரவாளர்களில் ஒரு தொகையினர் கடுந்தொனியில் பதில் வழங்கி வருகின்றமையினையும் சமூக வலைத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது. முஷாரப்

மேலும்...
எரிவாயு தட்டுப்பாடு அடுத்த 06 நாட்களுக்குள் நிவர்த்திக்கப்படும்; 08 லட்சம் சிலிண்டர்கள் சந்தைக்கு வருகின்றன: லிற்ரோ நிறுவனம் அறிவிப்பு

எரிவாயு தட்டுப்பாடு அடுத்த 06 நாட்களுக்குள் நிவர்த்திக்கப்படும்; 08 லட்சம் சிலிண்டர்கள் சந்தைக்கு வருகின்றன: லிற்ரோ நிறுவனம் அறிவிப்பு 0

🕔20.Nov 2021

எதிர்வரும் வாரத்துக்குள் 08 லட்சம் எரிவாயு சிலின்டர்கள் உள்ளூர் சந்தைக்கு வரும் லிற்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது செயற்பாடுகளை இடைநிறுத்தியதன் காரணமாக, உள்ளூர் சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையொன்றின் ஊடாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதன் விளைவாக நாட்டில் உள்நாட்டு எரிவாயுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை முன்னைய அரசாங்கம் தந்திரமாக ஒத்தி வைத்தது: அமைச்சர் பீரிஸ் குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தலை முன்னைய அரசாங்கம் தந்திரமாக ஒத்தி வைத்தது: அமைச்சர் பீரிஸ் குற்றச்சாட்டு 0

🕔19.Nov 2021

முன்னைய அரசாங்கம் வேண்டுமென்றே தந்திரமாக மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைத்ததாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று (19) நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கம் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான புதிய சட்டங்களை இயற்றுவதற்கு இயன்றவரை முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். புதிய சட்டமொன்றை நிறைவேற்றாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது என

மேலும்...
1938க்கு தினமும் 500 அழைப்புகள்; அதிகமானவை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பற்றியவை

1938க்கு தினமும் 500 அழைப்புகள்; அதிகமானவை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பற்றியவை 0

🕔19.Nov 2021

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின், பெண்கள் உதவி மத்திய நிலையத்தினுடைய 1938 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 500 தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக அந்த உதவி மத்திய நிலையத்தின் அதிகாரியான மானெல் ஜயமான்ன தெரிவித்துள்ளார். உள்வரும் அழைப்புகளில் 50 வீதமானவை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பானவை என்றும், பெண்களுக்கு எதிரான

மேலும்...
தவற விடப்பட்ட பாடநெறிகளை நிறைவுசெய்ய, புதிய திட்டம் வேண்டும்: இலங்கை ஆசிரியர் சங்கம்

தவற விடப்பட்ட பாடநெறிகளை நிறைவுசெய்ய, புதிய திட்டம் வேண்டும்: இலங்கை ஆசிரியர் சங்கம் 0

🕔19.Nov 2021

கொவிட் பரவல் காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த போது, மாணவர்களுக்கு தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்துவதற்கு, தெரிவுசெய்யப்பட்ட புதிய பாடத் திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு தாயரிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. கொவிட் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள், இடைநிறுத்தப்பட்டு மீண்டும் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்