சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஞ்சனிடம் கைத்தொலைபேசி உள்ளிட்டவை மீட்பு

🕔 November 22, 2021

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கைத்தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கைத்தொலைபேசி மற்றும் ‘ஹேண்ட்ஸ்ஃப்ரீ’ ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் சிறைச்சாலை பேச்சாளர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, அவர் சிறைச்சாலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ரஞ்சன் ராமநாயக்க சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், அவரின் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவ சிகிச்சையின் அடிப்படையில் வெலிக்கடை சிறைச்சாலையுடன் இணைந்த சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்