முஷாரப், இஷாக், அலிசப்ரி ரஹீம்; கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்: மக்கள் காங்கிரஸ் அதிரடித் தீர்மானம்

🕔 November 22, 2021

– அஹமட் –

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கட்சியின் தீர்மானத்தை மீறி, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை காரணமாக, இவர்கள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.எம். முஷாரப், இஷாக் ரஹ்மான் மற்றும் அலிசப்ரி ரஹீம் ஆகியோரே, இவ்வாறு கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகார சபை இன்று (22) இரவு கூடி, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

கட்சியின் யாப்பில் அரசியல் அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் அடிப்படையில், கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக, வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தமைக்காக மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரையும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதெனவும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதெனவும் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக, கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்க, மக்கள் காங்கிரஸ் முடிவு: மூன்று எம்.பிகள் இல்லாத நிலையில் ஏகமனதாக தீர்மானம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்