எரிவாயு தட்டுப்பாடு அடுத்த 06 நாட்களுக்குள் நிவர்த்திக்கப்படும்; 08 லட்சம் சிலிண்டர்கள் சந்தைக்கு வருகின்றன: லிற்ரோ நிறுவனம் அறிவிப்பு

🕔 November 20, 2021

திர்வரும் வாரத்துக்குள் 08 லட்சம் எரிவாயு சிலின்டர்கள் உள்ளூர் சந்தைக்கு வரும் லிற்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது செயற்பாடுகளை இடைநிறுத்தியதன் காரணமாக, உள்ளூர் சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையொன்றின் ஊடாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதன் விளைவாக நாட்டில் உள்நாட்டு எரிவாயுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் சந்தைக்கு தேவையான உள்நாட்டு எரிவாயுவை வழங்குவதன் மூலம் எரிவாயு தட்டுப்பாட்டைக் குறைக்கும் பொறுப்பு லிற்ரோ கேஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் உள்நாட்டு எரிவாயு தட்டுப்பாடு அடுத்த 06 நாட்களுக்குள் நிவர்த்திக்கப்படும் என்று லிற்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்