தவற விடப்பட்ட பாடநெறிகளை நிறைவுசெய்ய, புதிய திட்டம் வேண்டும்: இலங்கை ஆசிரியர் சங்கம்

🕔 November 19, 2021

கொவிட் பரவல் காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த போது, மாணவர்களுக்கு தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்துவதற்கு, தெரிவுசெய்யப்பட்ட புதிய பாடத் திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு தாயரிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள், இடைநிறுத்தப்பட்டு மீண்டும் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்த ஆசிரியர்களும் அதிபர்களும் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்