தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத சமயத் தலைவர்களுக்கான அறிவித்தல்

தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத சமயத் தலைவர்களுக்கான அறிவித்தல் 0

🕔25.Aug 2021

தடுப்பூசிகளை இதுவரை ஏற்றிக்கொள்ளாத சமயத் தலைவர்கள் அதுதொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலகத்துக்கு அறிவிக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமய தலைவர்களிடம் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக சகல சமய தலைவர்களுக்குமான தொலைபேசி

மேலும்...
மங்களவின் உடல் தகனம் செய்யப்பட்டது; நெருங்கிய குடும்பத்தவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி

மங்களவின் உடல் தகனம் செய்யப்பட்டது; நெருங்கிய குடும்பத்தவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி 0

🕔24.Aug 2021

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உடல் இன்று (24) கொழும்பு பொரல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கொவிட் சுகாதார வழிகாட்டுதல் காரணமாக, அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இதன்போது உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆயினும் மயானத்துக்கு வெளியில் பல அரசியல்வாதிகள் வருகை தந்திருந்தனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில்

மேலும்...
தலிபான் தலைவரை சிஐஏ பணிப்பாளர் காபூலில் சந்தித்து ரகசியப் பேச்சு

தலிபான் தலைவரை சிஐஏ பணிப்பாளர் காபூலில் சந்தித்து ரகசியப் பேச்சு 0

🕔24.Aug 2021

அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ பணிப்பாளர் வில்லியம் ஜே. பேன்ஸ் (William Burns) – தலிபான் தலைவர் அப்துல் கனி பராதரை (Abdul Ghani Baradar) காபூலில் ரகசிய இடத்தில் சந்தித்துப் பேசியுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றிய பிறகு, இரு தரப்பு தலைவர்களும் முதல் முறையாக சந்தித்துப்

மேலும்...
கொவிட் நிவாரணப் பணிக்காக சம்பளத்தை வழங்க முடியாது: ராஜாங்க அமைச்சர் பியல் தெரிவிப்பு

கொவிட் நிவாரணப் பணிக்காக சம்பளத்தை வழங்க முடியாது: ராஜாங்க அமைச்சர் பியல் தெரிவிப்பு 0

🕔24.Aug 2021

கொவிட் நிவாரப் பணிகளுக்காக தனது சம்பளத்தை வழங்க முடியாது என்று ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். அரச வங்கியொன்றில் பெற்றுக்கொண்ட கடனுக்காக தனது சம்பளத்தொகை அப்படியே வெட்டப்படுவதால், கொவிட் பணிக்காக தனது சம்பளத்தை வழங்க முடியாத இக்கட்டான நிலைக்கு தான் தள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
அரசுக்குச் சொந்தமான 5533 வாகனங்கள் இயங்கு நிலையில் இல்லை: அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிப்பு

அரசுக்குச் சொந்தமான 5533 வாகனங்கள் இயங்கு நிலையில் இல்லை: அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔24.Aug 2021

அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், அரச வணிக நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிடம் 82,194 வாகனங்கள் உள்ளன என்று, அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் தொடர்பான அறிக்கையொன்றினை பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைச்சர் எனும் வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – அமைச்சரவையில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையிலேயே

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல் 0

🕔24.Aug 2021

கொவிட் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரச துறையில் பணியாற்றும் ஊழியர்களிகளின் சம்பளத்தை குறைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

மேலும்...
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணம்

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணம் 0

🕔24.Aug 2021

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர காலமானார். அவருக்கு வயது 65 ஆகிறது. கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த போது, இன்று செவ்வாய்கிழமை (24) அவர் மரணமானார். சிறுபான்மை மக்களுக்காக அதிகளவில் குரல் கொடுத்து வந்த மங்கள சமரவீர, பல ஆட்சி மாற்றங்களுக்கான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்டுள்ளார். கடந்த

மேலும்...
புதிது வெளியிட்ட வீடியோ: 03 நாட்களில் சுமார் 11 லட்சம் பேரை சென்றடைந்து சாதனை

புதிது வெளியிட்ட வீடியோ: 03 நாட்களில் சுமார் 11 லட்சம் பேரை சென்றடைந்து சாதனை 0

🕔24.Aug 2021

‘புதிது’ செய்தித்தளத்தின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று, மூன்று நாட்களில் 10 லட்சத்து 79 ஆயிரத்து 341 பேரைச் சென்றடைந்து சாதனை படைத்துள்ளது. சமூக ஊடகத்தில் ஏற்கனவே வெளியாகியிருந்த வீடியோ ஒன்றை, ‘புதிது’ செய்தித்தளம் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டிருந்தது. ‘மறைத்தலின் அழகு’ எனும் தலைப்பில் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட அந்த வீடியோ, தற்போது

மேலும்...
புலிகளால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டுத் துப்பாக்கி மீட்பு

புலிகளால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டுத் துப்பாக்கி மீட்பு 0

🕔24.Aug 2021

– பாறுக் ஷிஹான் – மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி – காங்கேயனோடை பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 02 மகசின்களை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் நேற்று திங்கட்கிழமை(23) மாலை  மீட்டுள்ளனர். களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 09 எம்.எம் கைத்துப்பாக்கியே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளது.

மேலும்...
கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதைப் போல், ‘பேஸ்புக்’கில் போலிப் படம் வெளியிட்டவர் கைது

கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதைப் போல், ‘பேஸ்புக்’கில் போலிப் படம் வெளியிட்டவர் கைது 0

🕔23.Aug 2021

களுபோவில போதனா வைத்தியசாலையில் கொவிட் நோயினால் இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதைப் போன்ற போலியான படத்தை ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் நுகேகொட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் மீது –

மேலும்...
காரைதீவு பிரதேச சபை அமர்வில் கூச்சல், குழப்பம்: இடைநடுவில் தவிசாளர் தப்பியோடியதாக உறுப்பினர்கள் தகவல்

காரைதீவு பிரதேச சபை அமர்வில் கூச்சல், குழப்பம்: இடைநடுவில் தவிசாளர் தப்பியோடியதாக உறுப்பினர்கள் தகவல் 0

🕔23.Aug 2021

– நூருல் ஹுதா உமர் – காரைதீவு பிரதேச சபைத் தவிசாளரின் வாகனத்திற்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வரும் எரிபொருள் கொள்ளளவில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர் கொண்டுவந்த பிரேரணை பல்வேறு கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் ஒரு மேலதிக வாக்கினால் வெற்றி பெற்றுள்ளது. காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள்

மேலும்...
அமைச்சர்கள் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க தீர்மானம்

அமைச்சர்கள் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க தீர்மானம் 0

🕔23.Aug 2021

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்கத் தீர்மானித்துள்ளனர். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீரமானம் எடுக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – இதற்கான யோசனையை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்தார். இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் தகவலை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும்...
ஆப்கானிஸ்தான் கிறிக்கட் சபையின் பதில் தலைவராக ஃபஸ்லி நியமனம்: தலிபான்களுடனான சந்திப்பை அடுத்து தீர்மானம்

ஆப்கானிஸ்தான் கிறிக்கட் சபையின் பதில் தலைவராக ஃபஸ்லி நியமனம்: தலிபான்களுடனான சந்திப்பை அடுத்து தீர்மானம் 0

🕔23.Aug 2021

ஆப்கானிஸ்தான் கிறிக்கட் சபையின் பதில் தலைவராக அஸிசுல்லா ஃபஸ்லி நியமிக்கப்பட்டுள்ளார் என, கிறிக்கட் சபையின் ‘ட்விட்டர்’ பக்கத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸிசுல்லா ஃபஸ்லி – ஆப்கான் கிறிக்கட் சபையின் தலைவராக 2018 செப்டம்பர் தொடக்கம் 2019 ஜுலை வரையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ஞாயிற்றுக்கிழமை தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் கிறிக்கட் சபையினருக்கும் இடையில் சந்திப்பொன்று நடந்த பின்னர், அச்சபையின்

மேலும்...
பேக்கரி பொருட்கள் வழமை விலையில் விற்கப்படும்

பேக்கரி பொருட்கள் வழமை விலையில் விற்கப்படும் 0

🕔23.Aug 2021

பேக்கரி உற்பத்திப் பொருள்கள் எவ்வித விலை உயர்வுமின்றி வழமை விலையில் விற்பனை செய்யப்படும் என மாகாண பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மாகாண பேக்கரி உரிமையளார்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் காமினி கந்தேகெதர, நிக்கவெரட்டிய பிரதேசத்தில் நேற்று (22)இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோது இதனை கூறியுள்ளார். எனினும், ஒரு றாத்தல் பாணின் விலை இன்று முதல் 05

மேலும்...
கொவிட் காரணமாக மரணித்தோரில் 91 வீதமானோர், எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதோர்: விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே

கொவிட் காரணமாக மரணித்தோரில் 91 வீதமானோர், எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதோர்: விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே 0

🕔22.Aug 2021

நாட்டில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் 91 வீதமானோர் எந்தவிதமான தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் என்று, பிரதான தொற்று நோய் ஆய்வகத்தின் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்துள்ளார். மரணித்தவர்களில் 08 வீதமானோர் தடுப்பூசியின் ஒரு ‘டோஸ்’இனை மற்றும் பெற்றுக் கொண்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்