கொவிட் நிவாரணப் பணிக்காக சம்பளத்தை வழங்க முடியாது: ராஜாங்க அமைச்சர் பியல் தெரிவிப்பு

🕔 August 24, 2021

கொவிட் நிவாரப் பணிகளுக்காக தனது சம்பளத்தை வழங்க முடியாது என்று ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

அரச வங்கியொன்றில் பெற்றுக்கொண்ட கடனுக்காக தனது சம்பளத்தொகை அப்படியே வெட்டப்படுவதால், கொவிட் பணிக்காக தனது சம்பளத்தை வழங்க முடியாத இக்கட்டான நிலைக்கு தான் தள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றை ஒழிக்க அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒருமாதச் சம்பளத்தை அர்ப்பணிப்பு செய்ய முன்வந்துள்ளனர்.

எனினும் சிறுவர், மகளிர் விவகார ராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த தனது பொருளாதார நிலைமை காரணமாக தன்னுடைய சம்பளத்தை வழங்க முடியாதென தெரிவித்துள்ளார்.

Comments