தலைப்புச் செய்திகள்

கொவிட் காரணமாக மரணித்தோரில் 91 வீதமானோர், எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதோர்: விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே

நாட்டில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் 91 வீதமானோர் எந்தவிதமான தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் என்று, பிரதான தொற்று நோய் ஆய்வகத்தின் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

மரணித்தவர்களில் 08 வீதமானோர் தடுப்பூசியின் ஒரு ‘டோஸ்’இனை மற்றும் பெற்றுக் கொண்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயங்களை வெளியிட்டார்.

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டோரின் மரண வீதம் இரண்டு வீதமாகவே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு இரண்டு ‘டோஸ்’களையும் பெற்றுக் கொண்டவர்களின் மரணத்துக்கு கொவிட் மட்டும் காரணமல்ல என்றும், அவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும் பிரதான தொற்று நோய் ஆய்வகத்தின் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே மேலும் தெரிவித்துள்ளார்.