சிங்கத்துக்கு கொரோனா: தெஹிவளை மிருக காட்சி சாலையில் உறுதி

சிங்கத்துக்கு கொரோனா: தெஹிவளை மிருக காட்சி சாலையில் உறுதி 0

🕔18.Jun 2021

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வசித்துவரும் சிங்கம் ஒன்றுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிங்கம் 03 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தமையினால், மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்கமைய, இருமல் மற்றும் தொண்டை நோவினால் சிங்கம் அவதிப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதன்பின்னர் சிங்கத்தின் சளி மாதிரி – பேராதனை கால்நடை மருந்துவ பீடத்துக்கு அனுப்பப்பட்டு, அது தொடர்பான மேலதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய,

மேலும்...
மூன்று நகர சபை தவிசாளர்களின் உறுப்புரிமைகள் பறிபோயின: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

மூன்று நகர சபை தவிசாளர்களின் உறுப்புரிமைகள் பறிபோயின: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔17.Jun 2021

மூன்று நகர சபைகளின் உறுப்புரிமைகளும் தவிசாளர் பதவிகளும் பறிபோயுள்ளன. நேற்று முன்தினம் 15ஆம் திகதியிடப்பட்டு வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தலில், இவர்களின் நகர சபை உறுப்புரிமைகள் பறியோயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி, தங்காலை மற்றும் வெலிகம நகர சபைகளின் தவிசாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் வகித்த உறுப்புரிமையை இழந்துள்ளமையினால், அவர்களின் நகர சபை உறுப்புரிமையும் பறியோயுள்ளன. இதனால்,

மேலும்...
காஸா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: ஹமாஸின் தளங்கள் குறிவைக்கப்பட்டதாக அறிவிப்பு

காஸா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: ஹமாஸின் தளங்கள் குறிவைக்கப்பட்டதாக அறிவிப்பு 0

🕔16.Jun 2021

பலத்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரின் தளங்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை அதிகாலை முதல் காஸா நகரில் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தைக் கேட்க முடிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செவ்வாய்க்கிழமையன்று காஸா பகுதியில் இருந்து வெடிபொருள்களைக் கொண்ட பலூன்கள் இஸ்ரேலை நோக்கி பறக்கவிடப்பட்டன. இதனால் வயல் வெளிகள்

மேலும்...
ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டில் உறுப்புரிமைக்கு ரணில் பெயரிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டில் உறுப்புரிமைக்கு ரணில் பெயரிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு 0

🕔16.Jun 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு, அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பெயரிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களை, இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கையளித்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தேசியப்

மேலும்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரை பிணையில் விடுவிக்க உத்தரவு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரை பிணையில் விடுவிக்க உத்தரவு 0

🕔16.Jun 2021

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன சட்டவிரோதமான முறையில் ஆயுதக் களஞ்சியசாலையொன்றை நடத்திச் சென்றதாக போலி சாட்சியங்களை முன்வைத்த குற்றச்சாட்டில்

மேலும்...
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்  பொறுப்பதிகாரியாக மேனகா நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ் பொறுப்பதிகாரியாக மேனகா நியமனம் 0

🕔15.Jun 2021

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மேனகா மூக்காண்டி நியமனம்…சிரேஷ்ட ஊடகவியலாளர் மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான திருமதி. மேனகா மூக்காண்டி, இலங்கை இதழியல் கல்லூரியில், துறைசார் கல்வியைக் கற்றவராவார். 15 வருட

மேலும்...
பலஸ்தீனர்களுக்கு ஒரு அங்குல நிலைத்தையேனும் கொடுக்க மறுப்பவர்; முன்னாள் ராணுவ அதிகாரி: இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்டாலி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பலஸ்தீனர்களுக்கு ஒரு அங்குல நிலைத்தையேனும் கொடுக்க மறுப்பவர்; முன்னாள் ராணுவ அதிகாரி: இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்டாலி பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔14.Jun 2021

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் 07 உறுப்பினர்களுடன் 05ஆவது இடத்திலுள்ள கட்சியின் தலைவரான நஃப்டாலி பென்னெட் (Naftali Bennett) புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1972ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 49 வயதாகிறது. “பல ஆண்டுகளாக முடங்கிய தேசத்தை ஒற்றுமைப்படுத்துவேன்” என்று நஃப்டாலி நாட்டு மக்களுக்கு உறுதியளித்திருக்கிரார். பெஞ்சமின் நெதன்யாஹு ஆட்சிக்கு முடிவு காணும் விதமாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை

மேலும்...
ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவு: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவு: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔14.Jun 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி ஊடக சந்திப்பொன்றின் போது தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்ட விரோதமானது என ஆசாத் சாலி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும்...
ஜிஎஸ்பி வரிச் சலுகையை இழந்தால், ஒரு டொலருக்கு 300 ரூபா செலுத்த வேண்டிவரும்: முன்னாள் பிரதமர் ரணில் எச்சரிக்கை

ஜிஎஸ்பி வரிச் சலுகையை இழந்தால், ஒரு டொலருக்கு 300 ரூபா செலுத்த வேண்டிவரும்: முன்னாள் பிரதமர் ரணில் எச்சரிக்கை 0

🕔14.Jun 2021

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை நாடு இழந்தால், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் என்றும், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி 300 ரூபாவாக மாறும் எனவும் முன்னாள் பிரதமரும், ஐ.தே.கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே ஜிஎஸ்பி பிளஸ் விடயத்தை அரசியல்மயமாக்கி தூக்கி வீச வேண்டாம் என்றும்

மேலும்...
உரம் திருடிய அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

உரம் திருடிய அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது 0

🕔14.Jun 2021

உரம் பொதியிடப்பட்ட 50 பைகளை (Bags) திருடிய குற்றச்சாட்டில் வாரியபொல பிரதேசத்தில் உள்ள விவசாயத் திணைக்கள அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த உரப்பைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக, மேற்படி அபிவிருத்தி உத்தியோகத்தர் எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் வாரியபொலவில் உள்ள தனது தனிப்பட்ட இடத்தில் மேற்படி

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் எடுக்க முடியாது: அமைச்சர் சரத் வீரசேகர

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் எடுக்க முடியாது: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔14.Jun 2021

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும் என்றும், அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இல்லாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ரத்துச் செய்யவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில்

மேலும்...
வெலிகம பகுதியில் கைப்பற்றப்பட்ட பெருமளவு ஹெரோயின்;  துபாயில் வசிக்கும் இலங்கையர் பின்னணியில்: விசாரணை ஆரம்பம்

வெலிகம பகுதியில் கைப்பற்றப்பட்ட பெருமளவு ஹெரோயின்; துபாயில் வசிக்கும் இலங்கையர் பின்னணியில்: விசாரணை ஆரம்பம் 0

🕔14.Jun 2021

வெலிகம கடற் பகுதியில் சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்ட பெருமளவிலான ஹெரோயின் போதைப் பொருளை அனுப்பியதன் பின்னணியில், துபாயில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் உள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெலிகம கடற்கரையில் 219 கிலோகிராம் ஹெராயின் சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்திருந்ததது. இந்த கடத்தல் தொடர்பாக 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆறு சந்தேக நபர்கள்

மேலும்...
இஸ்ரேலில் புதிய ஆட்சி; நெஃப்தலி பென்னெட் பிரதமரானார்: பெஞ்சமின் நெதன் யாஹுவின் பதவி பறிபோனது

இஸ்ரேலில் புதிய ஆட்சி; நெஃப்தலி பென்னெட் பிரதமரானார்: பெஞ்சமின் நெதன் யாஹுவின் பதவி பறிபோனது 0

🕔14.Jun 2021

இஸ்ரேலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து அந்த நாட்டில் ஆட்சியெொன்றை அமைத்துள்ளது. புதிய அரசாங்கத்தின் பிரதமராக ‘நெஃப்தலி பென்னெட்’ பதிய பிரதமராக நேற்று ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுள்ளார். இதனால், 12 வருடங்களாக பிரதமராக இருந்து வந்த பெஞ்சமின் நெதன்யாஹுவின் பதவி பறிபோயுள்ளது. இஸ்ரேலில் 2009, மார்ச் 31 ஆம் திகதி தொடக்கம் பெஞ்சமின் பிரதமராக இருந்து வந்தார். அங்கு

மேலும்...
எரிபொருள் விலையேற்றம்; பொதுஜன பெரமுனவின் அறிக்கை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமே சவால் விடுகிறது: அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு

எரிபொருள் விலையேற்றம்; பொதுஜன பெரமுனவின் அறிக்கை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமே சவால் விடுகிறது: அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு 0

🕔13.Jun 2021

எரிபொருள்களின் விலை உயர்வுக்கான தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட து என, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவரின் அமைச்சில் தற்போது நடைபெற்று வரும் ஊடக சந்திப்பில் இதனைக் கூறினார். எரிபொருள் விலை உயர்வுக்கு அமைச்சரைக் குற்றம் சாட்டி பொதுஜன பெரமுன விடுத்த அறிக்கைக்கு பதிலளித்த அமைச்சர்; “நிதியமைச்சர் மஹிந்த

மேலும்...
நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு

நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு 0

🕔13.Jun 2021

நெல், அரிசி ,சீனி, பால்மா, மற்றும் சோளம் போன்றவை பதுக்கப்படுவதை தடுப்பதற்காக மூன்று விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வைத்துள்ளவர்கள் 07 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, அதிகார சபை இந்த வர்த்மானி அறிவித்தல்ளை வெளியிட்டுள்ளது அரிசி தயாரிப்பாளர், நெல் ஆலை உரிமையாளர்கள் ,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்