எரிபொருள் விலையேற்றம்; பொதுஜன பெரமுனவின் அறிக்கை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமே சவால் விடுகிறது: அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு

🕔 June 13, 2021

ரிபொருள்களின் விலை உயர்வுக்கான தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட து என, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அவரின் அமைச்சில் தற்போது நடைபெற்று வரும் ஊடக சந்திப்பில் இதனைக் கூறினார்.

எரிபொருள் விலை உயர்வுக்கு அமைச்சரைக் குற்றம் சாட்டி பொதுஜன பெரமுன விடுத்த அறிக்கைக்கு பதிலளித்த அமைச்சர்; “நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒப்புதலுக்குப் பிறகே எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன” என்றார்.

“நிதியமைச்சராக ஆவணத்தில் பிரதமர் கையெழுத்திட்டார்” என்றும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக் குழுவால் விலையை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், அமைச்சர் கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

எரிபொருள்களுக்கான விலையேற்றத்துக்கு பொறுப்பேற்று, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில பதவியிலிருந்து விலக வேண்டும் எனக் குறிப்பிட்டு, ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

இதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சர்; அந்த அறிக்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மட்டுமே சவால் விடுகிறது என மேலும் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பொறுப்பேற்று அமைச்சர் கம்மன்பில பதவி விலக வேண்டுமாம்: மொட்டுக் கட்சி தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்