எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பொறுப்பேற்று அமைச்சர் கம்மன்பில பதவி விலக வேண்டுமாம்: மொட்டுக் கட்சி தெரிவிப்பு

🕔 June 12, 2021

ரிபொருள்களுக்கான விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளமையினை அடுத்து, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் இவ்வாறான நிலைமையை தோற்றுவித்தமை தொடர்பில் முழுப் பொறுப்பையும் ஏற்று பதவி விலக வேண்டும் என்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் அறிக்கை ஒன்றினூடாக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை இணைக்குழு எரிபொருள் விலை அதிகரிப்புபுக்கு அனுமதி வழங்கியதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று நள்ளிரவு முதல் அனைத்து எரிபொருள்களுக்கும் விலை அதிகரிக்கப்பட்டன.

புதிய விலைகள்

அதற்கமைய 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. அதன் புதிய விலை 157 ரூபாவாகும்.

அத்துடன் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 23 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்