1758 மில்லியன் ரூபா பெறுமதியான 219 கிலோ ஹெரோயின் படகுகளில் சிக்கியது

🕔 June 13, 2021

வெலிகம பகுதிக்கு அருகில் பெரிய மீன்பிடி படகு ஒன்றிலிருந்து 200 கிலோ கிராம் ஹெரோயின் நேற்று சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் சிலிண்டர்கள் மற்றும் பொதிகளில் அடைக்கப்பட்டு மேற்படி ஹெரோயின் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோது கைப்பற்றப்பட்டுள்ளது.

புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கடற்படை, கடலோர காவற்படை மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு ஆகியவை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெலிகம, அஹங்கம, திக்வெல்லெ, கொட்டகொட, இஹல்வத்த, மிரிஸ்ஸ பொலவதுமோதர மற்றும் பிலியந்தல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பெறுமதி 1758 மில்லியன் ரூபாய் என தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்