ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவு: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

🕔 June 14, 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி ஊடக சந்திப்பொன்றின் போது தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்ட விரோதமானது என ஆசாத் சாலி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்ப்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்த அரச சொலிஸிட்டர் ஜெனரல் திலீப பிரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்