உரம் திருடிய அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

🕔 June 14, 2021

ரம் பொதியிடப்பட்ட 50 பைகளை (Bags) திருடிய குற்றச்சாட்டில் வாரியபொல பிரதேசத்தில் உள்ள விவசாயத் திணைக்கள அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த உரப்பைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக, மேற்படி அபிவிருத்தி உத்தியோகத்தர் எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் வாரியபொலவில் உள்ள தனது தனிப்பட்ட இடத்தில் மேற்படி உரப் பைகளை நேற்று களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நிலையில் பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

வாரியபொலி நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்