நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு

🕔 June 13, 2021

நெல், அரிசி ,சீனி, பால்மா, மற்றும் சோளம் போன்றவை பதுக்கப்படுவதை தடுப்பதற்காக மூன்று விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றை வைத்துள்ளவர்கள் 07 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, அதிகார சபை இந்த வர்த்மானி அறிவித்தல்ளை வெளியிட்டுள்ளது

அரிசி தயாரிப்பாளர், நெல் ஆலை உரிமையாளர்கள் , நெல் மற்றும் அல்லது அரிசியை களஞ்சியப்படுத்வோர் ,விநியோகிப்பவர்கள் அல்லது நெல் மற்றும் மொத்த அரிசி விற்பனையாளர்கள் தம்மிடமுள்ள, பொறுப்பிலுள்ள அல்லது தமது நிருவாகத்துக்கு உட்பட்டதாகவுள்ள நெல் மற்றும் அரிசி களஞ்சியம், கொள்கலன், அரிசி கிடங்கு அல்லது வேறு இடங்கள் முதலானவை நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்