இஸ்ரேலில் புதிய ஆட்சி; நெஃப்தலி பென்னெட் பிரதமரானார்: பெஞ்சமின் நெதன் யாஹுவின் பதவி பறிபோனது

🕔 June 14, 2021
புதிய பிரதமர் நெஃப்தலி பென்னெட்

ஸ்ரேலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து அந்த நாட்டில் ஆட்சியெொன்றை அமைத்துள்ளது. புதிய அரசாங்கத்தின் பிரதமராக ‘நெஃப்தலி பென்னெட்’ பதிய பிரதமராக நேற்று ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுள்ளார். இதனால், 12 வருடங்களாக பிரதமராக இருந்து வந்த பெஞ்சமின் நெதன்யாஹுவின் பதவி பறிபோயுள்ளது.

இஸ்ரேலில் 2009, மார்ச் 31 ஆம் திகதி தொடக்கம் பெஞ்சமின் பிரதமராக இருந்து வந்தார். அங்கு 02 ஆண்டுகளாக 04 முறை நாடாளுமன்றத் தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமினின் கட்சி 30 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும், அவரால் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது.

இந்த நிலையில் ராம்’ (RA’AM) எனப்படும் இஸ்லாமியவாதக் கட்சி (Islamist party) உட்பட 08 எதிர்க்கட்சிகள் இணைந்து, இஸ்ரேலில் அரசாங்கமொன்றை அமைப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.

இந்தக் கூட்டணி சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறது. இதன் படி 07 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ‘யாமினா’ கட்சியின் தலைவர் ‘நெஃப்தலி பென்னெட்’ முதலில் பிரதமராகப் பதவி ஏற்பார் என்றும், பின்னர் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரான ‘லேபிட்’டிடம் பிரதமர் பதவி ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ‘யாமினா’ கட்சி தலைவர் ‘நெஃப்தலி பென்னெட்’ வெற்றி பெற்றார். இதையடுத்து, இஸ்ரேலின் புதிய பிரதமராக அவர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் 27 பேர் உள்ளனர். அதில் 09 பெண்களும் அடங்குகின்றனர்.

இதன் காரணமாக, பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

பெஞ்சமின் நெதன்யாஹு

தொடர்பான செய்தி: இஸ்லாமிய கட்சியின் ஆதரவில், இஸ்ரேலில் அமைகிறது புதிய கூட்டணி அரசாங்கம்: 08 கட்சிகள் கைகோர்ப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்