20 முறை பயன்டுத்தக் கூடிய புதிய வகை முகக் கவசம்  தயாரிப்பு: பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அசத்தல்

20 முறை பயன்டுத்தக் கூடிய புதிய வகை முகக் கவசம் தயாரிப்பு: பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அசத்தல் 0

🕔3.Nov 2020

நாட்டில் முதன்முறையாக ஆன்டி வைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களால் ஆன முகக்கவசம் ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினர் தயாரித்துள்ளனர். பொதுவாக முகக்கவசத்தில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த முகக்கவசம் மூன்று வடிப்பான்களைக் கொண்டுள்ளது. குறித்த முகக்கவசத்தை 20 முறை பயன்படுத்தலாம் மற்றும் ஒரு

மேலும்...
22ஆக பதிவான கொரோனா மரணம் 21 ஆனது: இறுதி நபர் பட்டியலில் இருந்து நீக்கம்

22ஆக பதிவான கொரோனா மரணம் 21 ஆனது: இறுதி நபர் பட்டியலில் இருந்து நீக்கம் 0

🕔2.Nov 2020

நாட்டில் பதிவாகியதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த 22ஆவது கொரோனா மரணத்தை, கொரோனா மரணத்தில் உள்ளடக்குவதில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்திருந்தார். இதனையத்து அவரின் சடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை; வெற்றி யாருக்கு: புதிய கருத்து கணிப்பு முடிவு வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை; வெற்றி யாருக்கு: புதிய கருத்து கணிப்பு முடிவு வெளியானது 0

🕔2.Nov 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை 03ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை விடவும், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக புதிய கருத்து கணிப்பு மூலம் தெரிய வருகிறது. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவு நேற்று வெளியானது. என்.பி.சி நியூஸ் மற்றும்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜிதவும் குடும்பத்தினரும் பொத்துவிலில் தனிமைப்படுத்தப்பட்டனரா; செய்தியின் உண்மைத்தன்மை என்ன?  # fact check

முன்னாள் அமைச்சர் ராஜிதவும் குடும்பத்தினரும் பொத்துவிலில் தனிமைப்படுத்தப்பட்டனரா; செய்தியின் உண்மைத்தன்மை என்ன? # fact check 0

🕔2.Nov 2020

– மப்றூக் – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அவரின் குடும்பத்தினரும் பொத்துவில் – அறுகம்பே பிரசேத்துக்கு சுற்றுலா வந்த நிலையில், அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி பொய்யானது என ‘புதிது’ செய்தித்தளத்தளம் தெரிந்து கொண்டது. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அவரின் குடும்பத்தினரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை மீறி சுற்றுலா வந்தமை

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி ரமீஸ் அபூபக்கர், பேராசிரியராக நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி ரமீஸ் அபூபக்கர், பேராசிரியராக நியமனம் 0

🕔2.Nov 2020

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி ரமீஸ் அபூபக்கர், பேராசிரியராக நியமனம் பெற்றுள்ளார். இதன் மூலம் ‘இலங்கையின் முதலாவது முஸ்லிம் சமூகவியல் பேராசிரியர்’ எனும் பெருமை இவருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. அதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது சமூகவியல் பேராசியர் எனும் இடத்தினையும் ரமீஸ் அபூபக்கர் பெற்றுள்ளார். இந் நியமனம்

மேலும்...
கொரோனா பாதிப்புடன் இறுதியாக மரணித்தவர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிப்பு

கொரோனா பாதிப்புடன் இறுதியாக மரணித்தவர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிப்பு 0

🕔2.Nov 2020

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட நபர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருளுக்கு அடிமையான 27 வயது இளைஞர் ஒருவர், நோய் அறிகுறிகளுடன் கடந்த 31ஆம் திகதி பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தபோது வைத்தியசாலைக்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டிருந்தார். இவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பிரேத பரிசோதனையின்போது உறுதி

மேலும்...
தற்கொலையினால் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி: பாணந்துறையில் சம்பவம்

தற்கொலையினால் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி: பாணந்துறையில் சம்பவம் 0

🕔2.Nov 2020

தற்கொலை செய்து மரணித்த ஒருவர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட நபரின் பிரேத பரிசோதனையின் போது, அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. பானந்துறை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர்

மேலும்...
கொரோனா: 21 ஆவது நபர் பலி

கொரோனா: 21 ஆவது நபர் பலி 0

🕔1.Nov 2020

கொரோனா தொற்றினால் நாட்டில் மேலும் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மரணமாகியுள்ளார். இது கொரோனாவினால் ஏற்பட்ட 21ஆவது இறப்பாகும். மரணித்தவர் மஹர பகுதியை சேர்ந்த 40 வயதான ஆணொருவராவார். வெலிசறை வைத்தியசாலையில் இவர் உயிரிழந்தார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் இதுவரையில் (9.00 மணி வரையில்) 11,060 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
இருபதை நாம் ஆதரவளித்த பலனை முஸ்லிம் சமூகம் தெரிந்து கொள்ளும்; அப்போது விமர்சகர்களுக்கு வாயடைக்கும்: ஹாபிஸ் நசீர்

இருபதை நாம் ஆதரவளித்த பலனை முஸ்லிம் சமூகம் தெரிந்து கொள்ளும்; அப்போது விமர்சகர்களுக்கு வாயடைக்கும்: ஹாபிஸ் நசீர் 0

🕔1.Nov 2020

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு தாம் ஆதரவளித்ததற்கான அனுகூலங்களை முஸ்லிம் சமூகம் விரைவில் தெரிந்து கொள்ளும் என்றும், அவ்வேளையில் வீண் விமர்சகர்களின் வாய்கள் அடைத்துப் போகுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமை பற்றி தெளிவூட்டும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
மேல் மாகாணம் முழுவதும் 09ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடரும்: ராணுவத் தளபதி அறிவிப்பு

மேல் மாகாணம் முழுவதும் 09ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடரும்: ராணுவத் தளபதி அறிவிப்பு 0

🕔1.Nov 2020

கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில், மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தவகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 5.00 மணி முதல் – எதிர்வரும் 09ஆம் திகதி வரை, மேல் மாகாணத்தில் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் வகையில்

மேலும்...
20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பி.களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமா; ஊடகவியலாளரின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில்

20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பி.களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமா; ஊடகவியலாளரின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில் 0

🕔1.Nov 2020

– புதிது செய்தியாளர் – “எங்கள் அரசாங்கத்துக்கு சிறுபான்மை கட்சிகள் தேவையில்லை. ஆனால், சிறுபான்மை கட்சிகளுக்கு எமது அரசாங்கம் தேவையாக உள்ளது” என நீதியமைச்சர் அலிசப்றி மீண்டும் தெரிவித்துள்ளார். ‘நியூஸ் பெர்ஸ்ட்’ அலைவரிசையின் ‘நியூஸ் லைன்’ நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார். “முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு தற்போதைய அரசாங்கத்துக்கு

மேலும்...
இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக ‘பேஸ்புக்’கில் ‘ட்ரென்ட்’ செய்யப்படும் ‘ஹேஸ்டேக்’ வாசகம்

இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக ‘பேஸ்புக்’கில் ‘ட்ரென்ட்’ செய்யப்படும் ‘ஹேஸ்டேக்’ வாசகம் 0

🕔1.Nov 2020

– முன்ஸிப் அஹமட் – கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்கள் (ஜனாஸா) இலங்கையில் எரிக்கப்படுவதற்கு எதிராக ‘பேஸ்புக்’ இல் ‘ஹேஸ்டேக்’ வாசகமொன்றின் மூலம் முஸ்லிம்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். #stand_against_cremating_muslim_covid19_bodies_in_srilanka_challenge எனும் வாசகம் மூலமே – இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று தொடக்கம் குறித்த ‘ஹேஸ்டேக்’ வாசகம் – இலங்கை முஸ்லிம்களால் ‘பேஸ்புக்’கில் அதிகம்

மேலும்...
கொழும்பில் வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா; தாதி ஒருவரும் பாதிப்பு

கொழும்பில் வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா; தாதி ஒருவரும் பாதிப்பு 0

🕔1.Nov 2020

கொழும்பு தெற்கு போதனா (களுபோவில)வைத்தியசாலை வைத்தியர்கள் இருவரும், தாதியொருவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை முகத்துவாரம், தெமட்டகொட, மாளிகாவத்தை, மருதானை மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையங்களில் மேலும் 10 பொலிஸார் கொரோனாவினால் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 235 பெண் பொலிஸார், சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று ஞாயிறு காலை 4.00 மணி வரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்