மேல் மாகாணம் முழுவதும் 09ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடரும்: ராணுவத் தளபதி அறிவிப்பு

🕔 November 1, 2020

கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில், மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படவுள்ளது.

அந்தவகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 5.00 மணி முதல் – எதிர்வரும் 09ஆம் திகதி வரை, மேல் மாகாணத்தில் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடந்த 29ஆம் திகதி தொடக்கம் நாளை திங்கட்கிழமை வரை, மேல் மாகாணத்தில் அமுல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே எதிர்வரும் 09ஆம் திகதி வரை இந்த ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்