இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக ‘பேஸ்புக்’கில் ‘ட்ரென்ட்’ செய்யப்படும் ‘ஹேஸ்டேக்’ வாசகம்

🕔 November 1, 2020

– முன்ஸிப் அஹமட் –

கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்கள் (ஜனாஸா) இலங்கையில் எரிக்கப்படுவதற்கு எதிராக ‘பேஸ்புக்’ இல் ‘ஹேஸ்டேக்’ வாசகமொன்றின் மூலம் முஸ்லிம்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

#stand_against_cremating_muslim_covid19_bodies_in_srilanka_challenge எனும் வாசகம் மூலமே – இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று தொடக்கம் குறித்த ‘ஹேஸ்டேக்’ வாசகம் – இலங்கை முஸ்லிம்களால் ‘பேஸ்புக்’கில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது.

நேற்றைய தினம் கொரோனாவினால் நாட்டில் பலியான 20ஆவது நபர் – முஸ்லிம் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் உடலும் எரிக்கப்பட்டமை முஸ்லிம்களிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையிலேயே ‘கொரோனாவினால் இலங்கையில் இறக்கும் முஸ்லிம்களின் உடலை எரிப்பதற்கு எதிராக எழுவோம்’ எனும் அர்த்தப்பட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகத்தை ‘ஹேஸ்டேக்’ செய்து, அதனை ‘பேஸ்புக்’கில் முஸ்லிம்கள் ‘ட்ரென்ட்’ செய்து வருகின்றனர்.

Comments