நீண்ட வரட்சிக்குப் பிறகு, அம்பாறை மாவட்டத்தில் மழை

நீண்ட வரட்சிக்குப் பிறகு, அம்பாறை மாவட்டத்தில் மழை 0

🕔22.Jan 2017

நீண்ட வரட்சிக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நேற்றும், அதற்கு முன் தினமும் சிறிது சிறிதாகப் பெய்து வந்த மழையானது, தற்போது தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது. இம்முறை மாரி மழை பொய்துப் போனமையினால், அம்பாறை மாவட்டத்தில் கடுமையான வரட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே தற்போது,

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம்

ஜனாதிபதி மைத்திரி பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம் 0

🕔21.Jan 2017

– க. கிஷாந்தன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர், கொட்டக்கலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொட்டரே, கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இவ்வாறு தரையிறங்கியது. நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகவே, ஹெலிகொப்டர்

மேலும்...
பாவைனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் 62 பேருக்கு நியமனம்: அமைச்சர் றிசாத் வழங்கி வைத்தார்

பாவைனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் 62 பேருக்கு நியமனம்: அமைச்சர் றிசாத் வழங்கி வைத்தார் 0

🕔21.Jan 2017

– சுஐப் எம். காசிம் – மக்களின் நன்மை கருதி பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகளை மேலும் வலுவூட்டுவதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இவற்றின் மூலம் முழுமையான பயன் கிடைக்குமெனவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள 62 பரிசோதகர்களுக்கான நியமனக்

மேலும்...
புதிய வகைத் தேயிலை, ஜனாதிபதியால் அறிமுகம்

புதிய வகைத் தேயிலை, ஜனாதிபதியால் அறிமுகம் 0

🕔21.Jan 2017

– க. கிஷாந்தன் – புதிய ரக தேயிலையொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று சனிக்கிழமை அறிமுகப்படுத்தி வைத்தார். தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலையே, ஜனாதிபதியினால் அறிமுகம் செய்யப்பட்டது. தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து, இந்த அறிமுக விழா இடம்பெற்றது. இதன்போது, குறுந்தகவல் மற்றும்

மேலும்...
அரசியல் அகதியாக வந்த உமக்கு, கட்சியின் வரலாறு தெரிய நியாயமில்லை: தவத்தின் பதிவுக்குப் பதில்

அரசியல் அகதியாக வந்த உமக்கு, கட்சியின் வரலாறு தெரிய நியாயமில்லை: தவத்தின் பதிவுக்குப் பதில் 0

🕔20.Jan 2017

கிழக்கு மாகாணசபை மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம் – ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகம் தொடர்பாக எழுதிய பேஸ்புக் பதிவுக்குப் பதிலாக, ஒரு பதிவு நமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. ருசைத் அஹமத் என்பவர் இதை அனுப்பி வைத்துள்ளார். குறித்த புத்தகத்தை மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத் எழுதியதாக நம்பிக் கொண்டு, பசீரைத் தாக்கும் வகையில், தவம்

மேலும்...
சோபித தேரரின் சொசுகு வாகனம் தொலைந்து விட்டதாக பொலிஸில் புகார்; பேருவளையிலுள்ள ஹோட்டலில் திருமண சேவைக்காக ஓடுவதாகவும் தெரிவிப்பு

சோபித தேரரின் சொசுகு வாகனம் தொலைந்து விட்டதாக பொலிஸில் புகார்; பேருவளையிலுள்ள ஹோட்டலில் திருமண சேவைக்காக ஓடுவதாகவும் தெரிவிப்பு 0

🕔20.Jan 2017

கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி காலம் சென்ற மாதுலூவாவே சோபித தேரர் பயன்படுத்திய 02 கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனம் தொலைந்து விட்டதாக, மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருவளையிலுள்ள ஹோட்டல் ஒன்றில், தொலைந்து போனதாகக் கூறப்படும் வாகனம் திருமண நிகழ்வுகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாக, தமக்குத் தெரிய வந்துள்ளது என்று – முறைப்பாட்டாளர்கள்,

மேலும்...
அமைச்சர்களின் காரியாலய வாடகை கோடிகளில்: பட்டியலிடுகிறார் அனுர குமார திஸாநாயக்க

அமைச்சர்களின் காரியாலய வாடகை கோடிகளில்: பட்டியலிடுகிறார் அனுர குமார திஸாநாயக்க 0

🕔20.Jan 2017

அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் காரியாலயத்துக்கான மாதாந்த வாடகை 210 லட்சங்கள் என, ஜே.வி.பி. தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேபோன்று, அமைச்சர் சரத் பொன்சேகாவின் காரியாலய வாடகை 110 லட்சங்கள் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர்

மேலும்...
அது வெறும் டம்மி பீஸ்: தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள் குறித்து, தவத்தின் கருத்து

அது வெறும் டம்மி பீஸ்: தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள் குறித்து, தவத்தின் கருத்து 0

🕔20.Jan 2017

‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகம் வெளியானமையினை அடுத்து, அது தொடர்பில் பலரும் பல்வேறு விதமாக எழுதிக் கொண்டிருக்கின்றனர். சிலர் புத்தகத்திலுள்ள விடயதானங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர், புத்தகத்தை யார் எழுதியிருப்பார் என்று யோசித்து, அதை அதை எழுதியதாக தாங்கள் நினைக்கும் நபர் அல்லது நபர்களைக் குறிவைத்து, தாக்கி எழுதிக் கொண்டிருக்கின்றனர். இன்னொருபுறம், “இந்தப்

மேலும்...
ஊடக மாபியாக்களின் ஆபத்திலிருந்து முஸ்லிம்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அத்துறையில் நாம் உயர்வடைய வேண்டும் : அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

ஊடக மாபியாக்களின் ஆபத்திலிருந்து முஸ்லிம்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அத்துறையில் நாம் உயர்வடைய வேண்டும் : அமைச்சர் றிசாத் பதியுத்தீன் 0

🕔20.Jan 2017

– சுஐப். எம். காசிம் – ஊடக தர்மத்துக்கும், ஊடக நெறிமுறைகளுக்கும் மாற்றமாக சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் சில தனியார் ஊடகங்கள்  செயற்பட்டுவருகின்றன என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியின் பரிசளிப்பு விழா மருதானை டவர் மண்டபத்தில் இடம்பெற்ற போது, பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். பாடசாலை

மேலும்...
வரட்சியினால் அம்பாறை மாவட்ட சோளச் செய்கையாளர்கள் பாதிப்பு

வரட்சியினால் அம்பாறை மாவட்ட சோளச் செய்கையாளர்கள் பாதிப்பு 0

🕔20.Jan 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர்) நாட்டில் நிலவி வரும் வறட்சி காரணமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள சோளப் பயிர்ச் செய்கையாளர்கள் நஷ்டத்தினை எதிர்கொண்டு வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர். பெரும்போக மழை கிடைக்காமை காரணமாக, தமது சோளப் பயிர்களில் கணிசமானவை கருகிப் போயுள்ளதாகவும், சோளக்கதிர்கள் முழுமையாக முதிர்ச்சியடையாமை காரணமாகவும், விவசாயிகள் இவ்வாறானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும்...
ஜனாதிபதியின் மரணத்துக்கு திகதி குறித்த ஜோதிடர், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி

ஜனாதிபதியின் மரணத்துக்கு திகதி குறித்த ஜோதிடர், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி 0

🕔20.Jan 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம் மாதம் 26ஆம் திகதி மரணமாவார் எனத் தெரிவித்த ஜோதிடர், நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறும் கிரக மாற்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிராபத்து உள்ளதாக, ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி என்பவர் கூறியிருந்தார். இதன்படி, ஜனாதிபதி உயிரிழக்கவுள்ளதாக பிரசாரம் மேற்கொண்டமையினூடாக,

மேலும்...
ஊடகங்கள் எனது கருத்தை திரிவுபடுத்தி விட்டன:  நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர்

ஊடகங்கள் எனது கருத்தை திரிவுபடுத்தி விட்டன: நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் 0

🕔20.Jan 2017

நாடாளுமன்றத்தில், ஓராண்டுக்கு முன்பிருந்தே தான் சுயாதீனமாக இயங்கி வருவதாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு – தான் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “கடந்த ஓராண்டு காலமாகவே நான் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக இயங்கி வருகின்றேன். சுயாதீனமாக இயங்கி வருகின்ற போதிலும் அரசாங்கத்தை விட்டு

மேலும்...
சல்மான் வெட்டிய காய்: தேசியப்பட்டியல் தொடர்பில் உலவும் இரண்டு கதைகள்

சல்மான் வெட்டிய காய்: தேசியப்பட்டியல் தொடர்பில் உலவும் இரண்டு கதைகள் 0

🕔19.Jan 2017

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிக்கும் எம்.எச்.எம். சல்மான், தனது பதவியை ராஜிநாமா செய்வதற்கு மறுத்து விட்டார் என்று மு.கா. வட்டாரங்களில் பேசப்படுகிறது. கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கு தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சல்மான்

மேலும்...
நிறைந்த  ஆளுமைகளுடன் வாழ்ந்த  எச்.எம். பாயிஸ்

நிறைந்த ஆளுமைகளுடன் வாழ்ந்த எச்.எம். பாயிஸ் 0

🕔19.Jan 2017

  – என்.எம். அமீன் (தலைவர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்) இலங்கை முஸ்லிம்களது ஊடக வரலாற்றில் எச்.எம். பாயிஸுக்கு ஒரு தனிப் பெயர் உண்டு. பத்திரிகையாளராக, பத்திரிகை செயற்பாட்டாளராக, ஊடகப்பயிற்றுவிப்பாளராக, பத்திரிகை ஆசிரியராக, பத்திரிகை கண்காணிப்பாளராக பணி புரிந்த பன்மைமிகு ஆளுமை மிகு ஒருவராக சகோதரர் பாயிஸை நான் பார்க்கின்றேன். 1989 முதல் 1998

மேலும்...
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மழை பெய்யும்

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மழை பெய்யும் 0

🕔19.Jan 2017

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், நாளைய தினம் மழை பெய்யலாம் என்றும், திணக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, இடையிடையே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்