கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மழை பெய்யும்

🕔 January 19, 2017

Raining - 01டக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், நாளைய தினம் மழை பெய்யலாம் என்றும், திணக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இடையிடையே 50 கிலேமீற்றர் வேகத்தில் இடைக்கிடையே காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்