நீண்ட வரட்சிக்குப் பிறகு, அம்பாறை மாவட்டத்தில் மழை

🕔 January 22, 2017

Raining - 0986நீண்ட வரட்சிக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நேற்றும், அதற்கு முன் தினமும் சிறிது சிறிதாகப் பெய்து வந்த மழையானது, தற்போது தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது.

இம்முறை மாரி மழை பொய்துப் போனமையினால், அம்பாறை மாவட்டத்தில் கடுமையான வரட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே தற்போது, இருளான காலநிலையோடு, இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

நெற் செய்கையாளர்களுக்கு தற்போது பெய்து வரும் மழை, மிகவும் பலனுள்ளதாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும், மேட்டு நிலப் பயிர்ச் செய்கையாளர்கள், வரட்சி காரணமாக ஏற்கனவே நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தனர்.

மாவட்டத்தில் வரட்சி நிலவிய போதும், குளிரான கால நிலையும் சம காலத்தில் நிலவியமையினால், வெப்பத்தால் பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்