ஜனாதிபதி மைத்திரி பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம்

🕔 January 21, 2017

President - 966– க. கிஷாந்தன் –

னாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர், கொட்டக்கலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொட்டரே, கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இவ்வாறு தரையிறங்கியது.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகவே, ஹெலிகொப்டர் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தலவாக்கலையில் ஏற்பாடாகியிருந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி வருகை தந்தபோதே, இச்சம்பவம் நிகழ்ந்தது.

இதனையடுத்து,  தலவாக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்திற்கு, கொட்டக்கலையிலிருந்து ஜானாதிபதி  வாகனத்தில் பயணித்தார்.

கொட்டகலையில் தரையிறங்கிய ஜனாதிபதி, அங்கு பொது மக்களுடன் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.President - 977 President - 978 President - 979

Comments

புதிது பேஸ்புக் பக்கம்