சோபித தேரரின் சொசுகு வாகனம் தொலைந்து விட்டதாக பொலிஸில் புகார்; பேருவளையிலுள்ள ஹோட்டலில் திருமண சேவைக்காக ஓடுவதாகவும் தெரிவிப்பு

🕔 January 20, 2017

Sobitha thero - 0900கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி காலம் சென்ற மாதுலூவாவே சோபித தேரர் பயன்படுத்திய 02 கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனம் தொலைந்து விட்டதாக, மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேருவளையிலுள்ள ஹோட்டல் ஒன்றில், தொலைந்து போனதாகக் கூறப்படும் வாகனம் திருமண நிகழ்வுகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாக, தமக்குத் தெரிய வந்துள்ளது என்று – முறைப்பாட்டாளர்கள், தமது முறைப்பாட்டில் கூறியுள்ளனர். ஆயினும், குறித்த ஹோட்டல் எது என அவர்கள் சுட்டிக்காட்டவில்லை.

இது தொடர்பில், நாக விகாரையின் பிக்கு களனிய சோரத தேரர் தெரிவிக்கையில்; குறித்த வாகனம் காணாமல் போகவில்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த வாகனம் வேறு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

“மேற்படி வாகனத்தை திருத்துவதற்காக, வேறொரு இடத்தில் நிறுத்தி வைத்தோம். ஆனால், திருத்த வேலைக்காக பெருமளவு பணம் தேவையாக இருக்கிறது” எனவும், களனிய சோரத தேரர் குறிப்பிட்டார்.

வாகனம் தொலைந்து போனதாக பதியுப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் தன்னிடம் இதுவரை அறிக்கைகள் எவற்றினையும் பெறவில்லை என்றும், அவ்வாறு பொலிஸார் தம்மிடம் விசாரித்தால், பதிலளிக்க தான் தயாராக உள்ளதாகவும் சோரத தேரர் மேலும் கூறினார்.

குறித்த முறைப்பாடு பிழையானது என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்