Back to homepage

மேல் மாகாணம்

கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்களை, ஏப்ரலில் நடத்த வேண்டும்: ‘கபே’ கோரிக்கை

கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்களை, ஏப்ரலில் நடத்த வேண்டும்: ‘கபே’ கோரிக்கை 0

🕔21.Feb 2018

மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்பட வேண்டும் என்று கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த வருடம் கலைக்கப்பட்ட கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள், அரசாங்கம் வாக்களித்ததன் அடிப்படையில்

மேலும்...
நாட்டை ஐ.தே.கட்சினர் நாசப்படுத்துவதாக ஜனாதிபதி கூறிக் கொண்டு, இரவில் ரகசியமாக அவர்களைச் சந்திக்கின்றார்: நாமல் குற்றச்சாட்டு

நாட்டை ஐ.தே.கட்சினர் நாசப்படுத்துவதாக ஜனாதிபதி கூறிக் கொண்டு, இரவில் ரகசியமாக அவர்களைச் சந்திக்கின்றார்: நாமல் குற்றச்சாட்டு 0

🕔21.Feb 2018

நாட்டின் பொருளாதாரத்தை ஐக்கிய தேசியக் கட்சிதான் நாசப்படுத்தியதாக கூறிய ஜனாதிபதி, அதே கட்யினரோடு சேர்த்து ஆட்சியமைக்க முயற்சித்து வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். அதனால்தான் இரவுகளில் ஐக்கிய தேசியக் கட்சியினரை ரகசியமாக அவர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றார் எனவும் நாமல் கூறியுள்ளார். மேலும், பிரதமரை கூட தீர்மானித்துக்கொள்ள முடியாத சூழலில், பொதுமக்களை

மேலும்...
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முடியாது விட்டால், மஹிந்தவிடம் அரசாங்கத்தை ஒப்படையுங்கள்: ஞானசார தேரர்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முடியாது விட்டால், மஹிந்தவிடம் அரசாங்கத்தை ஒப்படையுங்கள்: ஞானசார தேரர் 0

🕔20.Feb 2018

அரசாங்கத்தை ஸ்திரமாகக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ முடியாது விட்டால், உள்ளுராட்சித் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசாங்கத்தை ஒப்படைக்குமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். அதன்போது

மேலும்...
புதிய மாகாண சபை தேர்தல் முறைமையை கை விட வேண்டும்; ஸ்திரமான ஆட்சிக்கு ஆதரவளிப்போம்: அமைச்சர் றிசாட்

புதிய மாகாண சபை தேர்தல் முறைமையை கை விட வேண்டும்; ஸ்திரமான ஆட்சிக்கு ஆதரவளிப்போம்: அமைச்சர் றிசாட் 0

🕔20.Feb 2018

உள்ளுராட்சித் தேர்தலை படிப்பினையாகக் கொண்டு மாகாண தேர்தல் முறைமை, நாடாளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள மாற்றங்களை உடனடியாகக் கைவிட்டு பழைய முறையில் தேர்தல்களை நடத்த வேண்டுமென ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அகில இலங்கை மகள் காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துவதாக அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர், ஏனைய கட்சித் தலைவர்களும் இந்த விடயத்தில் கரிசனை

மேலும்...
பிரதமரின் திட்டத்தை இடைநிறுத்தினார் ஜனாதிபதி; ஐ.தே.க.வினரும் அமைச்சரவையில் ஆதரவு

பிரதமரின் திட்டத்தை இடைநிறுத்தினார் ஜனாதிபதி; ஐ.தே.க.வினரும் அமைச்சரவையில் ஆதரவு 0

🕔20.Feb 2018

உயர்தர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் டெப் (Tab) வழங்கும் பிரமரின் திட்டத்தினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார். அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற போது, 04 பில்லியன் ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை அமுல் செய்வதை விடவும், அந்த நிதியில் நாட்டுக்குத் தேவையான இன்னுமொரு உற்பத்தி திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தலாம் என ஜனாதிபதி தெரிவித்த

மேலும்...
அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; பிரதமர் ரணில் பங்கேற்கவில்லை

அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; பிரதமர் ரணில் பங்கேற்கவில்லை 0

🕔20.Feb 2018

அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற வேளையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதில் கலந்து கொள்ளவில்லை என தெரிய வருகிறது. அதேவேளை, ஐ.தே.கட்சினருக்கும் சுதந்திரக் கட்சியினருக்குமிடையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கடுமையான வாய்த் தர்க்கங்களும், வாக்கு வாதங்களும் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க வேண்டுமென

மேலும்...
மேலதிக பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை, அடுத்த வாரம் சமர்ப்பிக்க வேண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழு

மேலதிக பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை, அடுத்த வாரம் சமர்ப்பிக்க வேண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழு 0

🕔20.Feb 2018

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கட்சிகளுகள் மற்றும் குழுக்களுக்கு மேலதிக பட்டியலில் கிடைத்த ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர் பட்டியலை, எதிர்வரும் வாரமளவில் தனக்கு கையளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் மற்றும் சுயேட்சைக் குழுவின் தலைமை வேட்பாளர் ஆகியோர் இதனை அனுப்பி வைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கட்சி மற்றும் சுயேட்சைக்

மேலும்...
தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பில் அறிவிப்பில்லை: சபாநாயகர் தெரிவிப்பு

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பில் அறிவிப்பில்லை: சபாநாயகர் தெரிவிப்பு 0

🕔20.Feb 2018

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பில் தனக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று செவ்வாய் கிழமை தெரிவித்துள்ளார். எனவே, இவ்விடயம் தொடர்பில் நாளை புதன்கிழமை அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் தனித்தனியாக ஆட்சியமைப்பதற்கான முஸ்தீபுகளை எடுத்துவரும் நிலையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாளைய தினம்

மேலும்...
நாட்டில் செயற்கை மழை பொழிவிக்க திட்டம்; தாய்லாந்து நிபுணர்கள் களத்தில்

நாட்டில் செயற்கை மழை பொழிவிக்க திட்டம்; தாய்லாந்து நிபுணர்கள் களத்தில் 0

🕔20.Feb 2018

நாட்டில் செயற்கை மழை பெய்விப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக தாய்லாந்தைச் சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கை வந்துள்ளனர் எனவும் அமைச்சு கூறியுள்ளது. இந்த நிலையில், நீர் மின் நிலையங்களைச் சூழவுள்ள பிரதேசங்களில் மேற்படி நிபுணர்கள் கள ஆய்வில் இன்றும் நாளையும் ஈடுபடவுள்ளனர். அமைச்சர் ஊடகப் பேச்சாளர்

மேலும்...
விமல் வீரவங்சவின் கல்வித் தகைமை; நாடாளுமன்றில் போட்டுடைத்தார் ராஜித சேனாரத்ன

விமல் வீரவங்சவின் கல்வித் தகைமை; நாடாளுமன்றில் போட்டுடைத்தார் ராஜித சேனாரத்ன 0

🕔19.Feb 2018

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச, 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். அதேவேளை, விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த காலத்தில், அவருடைய சகோதரியின் மகளின் திருமணத்தை அரச பணத்தில் நடத்தியாகவும், அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம் சாட்டினார். “பிச்சைக்காரர்களான இந்த முன்னாள் அமைச்சர்கள்

மேலும்...
லசந்த கொலையாளிகள் கைது செய்யப்படுவதை, அரசாங்க பெரும்புள்ளி தடுப்பதாக குற்றச்சாட்டு

லசந்த கொலையாளிகள் கைது செய்யப்படுவதை, அரசாங்க பெரும்புள்ளி தடுப்பதாக குற்றச்சாட்டு 0

🕔19.Feb 2018

ஊடவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி – ரகசிய வாக்கு மூலம் வழங்குவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாளை மறுதினம் 21ஆம் திகதி பகல் 1.00 மணிக்கு, ரகசிய வாக்குமூலத்தை வழங்குமாறு கல்சிசை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. லசந்த விக்ரமதுங்க கொலை

மேலும்...
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருடன் வருவோம்: மஹிந்தவிடம் சுசில் உறுதி

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருடன் வருவோம்: மஹிந்தவிடம் சுசில் உறுதி 0

🕔19.Feb 2018

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத அரசாங்கத்தை இந்த வாரத்துக்குள் அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கத் தவறினால், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், ஒன்றிணைந்த எதிரணியில் இணைவார்கள் என்று, அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு

மேலும்...
கோடிகளில் விலை பேசப்படும் தும்பிக் கையன்களும், காசோடு காத்திருக்கும் ‘ராஜா’வும்

கோடிகளில் விலை பேசப்படும் தும்பிக் கையன்களும், காசோடு காத்திருக்கும் ‘ராஜா’வும் 0

🕔19.Feb 2018

– எம்.ஐ. முபாறக் –நாடு பூராகவும் மொட்டு விரிந்ததால் சரிந்து போன கையின் ராஜ்யத்தை கும்கிக் குட்டிகளை வைத்தே கட்டி எழுப்பப் போகிறாராம் கையின் சொந்தக்காரர்.கையின் தனி ராஜ்யத்தை அமைக்கும் இந்த முயற்சிக்கு கும்கியின் தலைவரை  எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும் பெருந்தலைவரின் சகோதரனான அரிசி ஆலை உரிமையாளரும் மூட்டைகளில்

மேலும்...
அரசியல் கொதிநிலை குறித்து, நாடாளுமன்றில் இன்று மாலை விவாதம்

அரசியல் கொதிநிலை குறித்து, நாடாளுமன்றில் இன்று மாலை விவாதம் 0

🕔19.Feb 2018

தேசிய அரசியலில் கொதிநிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அது குறித்து இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில், இன்றைய தினம் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிணைந் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் தினேஷ் குணவர்தன, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்கான வேண்டுகோள் ஒன்றை

மேலும்...
நீதிமன்ற அறிவித்தலை அர்ஜுன் மகேந்திரன் புறக்கணித்தால், சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்க தீர்மானம்

நீதிமன்ற அறிவித்தலை அர்ஜுன் மகேந்திரன் புறக்கணித்தால், சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்க தீர்மானம் 0

🕔18.Feb 2018

பிணைமுறி மோசடி சந்தக நபர்களில் ஒருவரான, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக, சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக இரண்டாவது முறையாகவும் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலை அவர் புறக்கணிப்பாராயின் இந்த நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டமா அதிபர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்