கோடிகளில் விலை பேசப்படும் தும்பிக் கையன்களும், காசோடு காத்திருக்கும் ‘ராஜா’வும்

🕔 February 19, 2018
– எம்.ஐ. முபாறக் –

நாடு பூராகவும் மொட்டு விரிந்ததால் சரிந்து போன கையின் ராஜ்யத்தை கும்கிக் குட்டிகளை வைத்தே கட்டி எழுப்பப் போகிறாராம் கையின் சொந்தக்காரர்.

கையின் தனி ராஜ்யத்தை அமைக்கும் இந்த முயற்சிக்கு கும்கியின் தலைவரை  எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும் பெருந்தலைவரின் சகோதரனான அரிசி ஆலை உரிமையாளரும் மூட்டைகளில் பணத்தை வைத்துக்கொண்டு கும்கிக் குட்டிகளுக்கு விலை பேசுகின்றனராம்.

ஒவ்வொரு குட்டிக்கும் சுமார் 20 கோடி ரூபா வரை விலை பேசப்பட்டு வருகிறதாம்.எத்தனை கோடியையாவது அல்லி வீசி கையின் தனி ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்பது அரிசி உரிமையாளரின் திட்டம்.

அதேபோல் கோடிக்கணக்கான ரூபா பணத்தை கொட்டி கும்கியின் தலைவரை நிரந்தரமாகக் குழிக்குள் தள்ள வேண்டும் என்பது தொலைகாட்சி நிறுவன உரிமையாளரின் வெறியாகும்.

தேசத்தின் அன்றைய தலைவரின்  பக்கம் பாய்ந்த கும்கி குட்டிகளின்  எண்ணிக்கையை விடவும் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்குமாம்.இன்னும் ஓரிரு நாட்களில் கையின் தனி ராஜ்ஜியம் அமைவதைப் பார்க்கலாமாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்