நாட்டில் செயற்கை மழை பொழிவிக்க திட்டம்; தாய்லாந்து நிபுணர்கள் களத்தில்

🕔 February 20, 2018

நாட்டில் செயற்கை மழை பெய்விப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக தாய்லாந்தைச் சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கை வந்துள்ளனர் எனவும் அமைச்சு கூறியுள்ளது.

இந்த நிலையில், நீர் மின் நிலையங்களைச் சூழவுள்ள பிரதேசங்களில் மேற்படி நிபுணர்கள் கள ஆய்வில் இன்றும் நாளையும் ஈடுபடவுள்ளனர்.

அமைச்சர் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன கூறுகையில்; நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கான நீர்நிலைகளின் நீர் மட்டம் 59 வீதமாக குறைவடைந்துள்ளதாகக் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின் சக்தி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், நீர் மின் நிலையங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் செயற்கை மழை பொழிவிக்கப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்