மேலதிக பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை, அடுத்த வாரம் சமர்ப்பிக்க வேண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழு

🕔 February 20, 2018

ள்ளூராட்சி மன்ற தேர்தலில் கட்சிகளுகள் மற்றும் குழுக்களுக்கு மேலதிக பட்டியலில் கிடைத்த ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர் பட்டியலை, எதிர்வரும் வாரமளவில் தனக்கு கையளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் மற்றும் சுயேட்சைக் குழுவின் தலைமை வேட்பாளர் ஆகியோர் இதனை அனுப்பி வைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்குக் கிடைத்த ஆசனங்களுக்காக சட்டத்தில் குறிப்பிட்ட படி, பெண் வேட்பாளர்களை நியமிப்பதில், அவை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்