
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்வதால், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை மேலும் 90 நாட்களுக்குத் தடுப்புக்காவலில் வைக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அனுமதி பெற்றுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், சுரேஷ் சாலையை, பிப்ரவரி 25 அன்று – பெலியகொடவில் குற்றப் புலனாய்வுத் துறையினர் கைதுசெய்தனர்.
இதேவேளை, சுரேஷ் சாலே தாக்கல் செய்த மனு தொடர்பாக – தாக்கல் செய்யப்பட்ட குறுக்கீட்டு மனுக்கள் மீது, அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டுமா என்பதை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒக்டோபர் 07ஆம் திகதியன்று அறிவிக்கும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் – தான் கைது செய்யப்பட்டமையை எதிர்த்து,சுரேஷ் சாலே மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சுரேஷ் சாலே மனு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குறுக்கீட்டு மனுக்களைப் பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.



