தலைப்புச் செய்திகள்

பதுளை போதனா வைத்தியசாலை மயக்கவியல் நிபுணர் டொக்டர் பிரபாத் சடலமாக மீட்பு

துளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த மயக்கவியல் நிபுணர் (Consultant Anaesthesiologist) டொக்டர் பிரபாத் தயாரத்ன இறந்த நிலையில், அவரின் உடல் – மஹியங்கனை-இல் உள்ள மபாகடவேவ பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பாறையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் நேற்று காணாமல் போனதாகக் கூறப்பட்ட படுகிறது.

அவரது கார் பதுளை-மஹியங்கன வீதியிலுள்ள மபாகடவேவவில் 17வது மைல் கல் அருகே கண்டெடுக்கப்பட்டது.

டொக்டர் பிரபாத் தயாரத்ன நேற்று காலை (23) பதுளை போதனா வைத்தியசாலையில் பணியில் இருந்ததாகவும், ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும், பொலிஸார் தெரிவித்தனர். அவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

மீகஹகியுல பகுதியின் சிசிடிவி காட்சிகளில் வைத்தியரின் வாகனம் மஹியங்கனையை நோக்கிச் செல்வது பதிவானதை அடுத்து – விசாரணைகள் தொடங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில், பதுளை-மஹியங்கனை பிரதானவீதியிலுள்ள 17வது மைல் கல் அருகே, கார் கண்டெடுக்கப்பட்டது.

வாகனம் கண்டெடுக்கப்பட்ட பகுதி, காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்லும் வனப்பகுதியால் சூழப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.