Back to homepage

மேல் மாகாணம்

ஜனாதிபதியின் விருப்பத்துக்கு, மங்கள சமரவீர இணக்கம்

ஜனாதிபதியின் விருப்பத்துக்கு, மங்கள சமரவீர இணக்கம் 0

🕔24.Dec 2018

அரச ஊடகங்க நிறுவனங்களின் தலைமைப் பதவிக்கு ஜனாதிபதி பிரேரிக்கும் நபர்களை நியமிப்பதற்கு, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இணக்கம் தெரிவித்துள்ளார் என்று, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது அரச ஊடக நிறுவனங்களின் தலைமைப் பதவியில் உள்ளவர்களுக்குப் பதிலாக, ஜனாதிபதி பெயர் குறிப்பிடும் நபர்கள், இதற்கமைய நியமிக்கப்படவுள்ளனர். அதற்கிணங்க, ஜனாதிபதி தரப்பில் சிபாரிசு செய்யப்படும் நபர்களின்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔23.Dec 2018

மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டுமென்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண ச​பைக்கானத் தேர்தல் ஒருவருடத்துக்கும் மேலாக தாமதித்துள்ள நிலையில், குறித்த தேர்தலை கலப்பு முறையில் நடத்தமுடியாத பட்சத்தில், பழைய முறையிலேனும் நடத்த வேண்டுமெனவும் அவர் கூறினார். எனவே, இது தொடர்பில் நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் அவர் மேலும்

மேலும்...
09 மாகாண சபைகளுக்கும், ஒரே நாளில் தேர்தல்: அமைச்சர் வஜிர தெரிவிப்பு

09 மாகாண சபைகளுக்கும், ஒரே நாளில் தேர்தல்: அமைச்சர் வஜிர தெரிவிப்பு 0

🕔22.Dec 2018

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல், ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர், நேற்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை, உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்ற பின்னரே, இந்த தகவலை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “09

மேலும்...
அமைச்சரவை அந்தஸ்தற்ற, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவியேற்பு: ஹரீசின் அமைச்சில் குழப்பம்

அமைச்சரவை அந்தஸ்தற்ற, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவியேற்பு: ஹரீசின் அமைச்சில் குழப்பம் 0

🕔21.Dec 2018

அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள் 03 பேரும், ராஜாங்க அமைச்சர்கள் 17 பேரும், பிரதி அமைச்சர்கள் 07 பேரும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வு  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அவர்களின் பெயர்களும் பெற்றுக் கொண்ட அமைச்சு விபரமும் பின்வருமாறு; அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள் ஹர்ஷ டி சில்வா

மேலும்...
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி: முக்கிய விடயங்கள் அம்பலமாயின

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி: முக்கிய விடயங்கள் அம்பலமாயின 0

🕔21.Dec 2018

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி பற்றி சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தடயவியல் கணக்காய்வொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென்று 2018.01.18ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் ஒருவருட காலமாகியும் அந்த கணக்காய்வு இதுவரையில் மேற்கொள்ளப்படாமை பாரிய தவறாகும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படும் மத்திய வங்கியின் பிணைமுறி

மேலும்...
‘கறுப்பு ஊடகங்கள்’ மீது ரணில் பாய்ச்சல்: ஜனவரியில் பட்டியலை வெளியிடப் போவதாகவும் தெரிவிப்பு

‘கறுப்பு ஊடகங்கள்’ மீது ரணில் பாய்ச்சல்: ஜனவரியில் பட்டியலை வெளியிடப் போவதாகவும் தெரிவிப்பு 0

🕔21.Dec 2018

கறுப்பு ஊடகங்கள் அமைச்சரவை தொடர்பில் பொய்யான செய்திகளை வெளியிட்டு சதிகளை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் குற்றம் சாட்டினார். இந்த கறுப்பு ஊடகங்களின் பட்டியலை ஜனவரி மாதம் சபையில் முன்வைப்பதாகவும் அவர் கூறினார். அடுத்த ஆண்டின் முதலாவது காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், கணக்கறிக்கை மீதான விவாதத்தை

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமானால், அதில் மைத்திரியே போட்டியிட வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமானால், அதில் மைத்திரியே போட்டியிட வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔21.Dec 2018

நாடு தழுவிய தேர்தல் ஒன்றில்தான் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அல்லது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். ஆயினும்  இவ்வாறான தேர்தலிலும் வெவ்வேறு வகையான சதிகள் இடம்பெறலாம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.உயர்கல்வி அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் தனது கடமைகளை பொறுப்பேற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர்  இதனைக் கூறினார்.அமைச்சர் ஹக்கீம்

மேலும்...
எரிபொருட்களுக்கான விலைகளைக் குறைப்பு: நாடாளுமன்றில் பிரதமர் அறிவிப்பு

எரிபொருட்களுக்கான விலைகளைக் குறைப்பு: நாடாளுமன்றில் பிரதமர் அறிவிப்பு 0

🕔21.Dec 2018

எரிபொருட்களுக்கான விலைகளைக் குறைத்து நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார். அந்த வகையில் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோலின் விலை 10 ரூபாவாலும், டீசலின் விலை 05 ரூபாவினாலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன. அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதம மந்திரியாகப் பதவியேற்ற போதும், சடுதியாக மூன்று

மேலும்...
அமைச்சர் பதவிகளை சிலருக்கு மைத்திரி ஏன் நிராகரித்தார்: காரணங்களும், பின்னணியும்

அமைச்சர் பதவிகளை சிலருக்கு மைத்திரி ஏன் நிராகரித்தார்: காரணங்களும், பின்னணியும் 0

🕔21.Dec 2018

இலங்கையில் புதிய அமைச்சரவையை நிறுவும் பொருட்டு, நேற்று, வியாழக்கிழமை 29 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பக்கமாக கட்சி மாறிய எவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை. தான் தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, ரணில் விக்ரமசிங்கவின் அணிக்கு மாறிய நாடாளுமன்ற

மேலும்...
தனது சமூகத்துக்குத் தேவையான அமைச்சினை பெற்றுக் கொண்ட றிசாட்: கடமைகளைப் பொறுப்பேற்றார்

தனது சமூகத்துக்குத் தேவையான அமைச்சினை பெற்றுக் கொண்ட றிசாட்: கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔20.Dec 2018

– அஹமட்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று  வியாழக்கிழமை தனது அமைச்சுக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக, றிசாட் பதியுதீன் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதை அடுத்து, அமைச்சுக் கடமைகளை ஏற்றார். றிசாட் பதியுதீன்

மேலும்...
ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் கட்சியிலேயே உள்ளனர்: சபாநாயகருக்கு அறிவிப்பு

ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் கட்சியிலேயே உள்ளனர்: சபாநாயகருக்கு அறிவிப்பு 0

🕔20.Dec 2018

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள், இன்னும் அந்த கூட்டமைப்பிலேயே அங்கம் வகிக்கின்றனர் என, சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர், இந்த தகவலை எழுத்து மூலம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற அங்கத்துவம் தொடர்பில் சட்டச் சிக்கல்கள் எழுந்தமையினை அடுத்தே, இந்த

மேலும்...
புதிய அமைச்சரவை: 29 பேர் பதவிப் பிரமாணம்

புதிய அமைச்சரவை: 29 பேர் பதவிப் பிரமாணம் 0

🕔20.Dec 2018

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று வியாழக்கிழமை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாபதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 29 பேர், புதிய அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்தனர். அவர்களின் விபரம் வருமாறு; பிரதமர் ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதில் சிக்கல்

மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதில் சிக்கல் 0

🕔19.Dec 2018

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஒக்டோபர் மாதம் பிரதமர் பதவியேற்று 50 நாட்களின் பின்னர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், தற்போது அவர் சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவே முடியாது என்கிற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின்

மேலும்...
ஞானசார தேரரை விடுவிக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஞானசார தேரரை விடுவிக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை 0

🕔19.Dec 2018

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மஹா நிக்காயாவின் கோட்டே மகாநாயக்க தேரர் இத்தேபன்ன தம்மாலங்கார கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தான் செய்த தவறை ஞானசாரர்  உணர்ந்துக்கொண்டுள்ளதால், எதிர்வரும் நத்தார் தினத்தில் ஜனாதிபதியின் கீழ் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படும் கைதிகளுடன் ஞானசார

மேலும்...
ரணிலின் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவியில்லை

ரணிலின் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவியில்லை 0

🕔19.Dec 2018

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படாதென, அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் வைத்​தே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். மேலும், அவ்வாறு ரணில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்