எரிபொருட்களுக்கான விலைகளைக் குறைப்பு: நாடாளுமன்றில் பிரதமர் அறிவிப்பு
எரிபொருட்களுக்கான விலைகளைக் குறைத்து நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.
அந்த வகையில் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோலின் விலை 10 ரூபாவாலும், டீசலின் விலை 05 ரூபாவினாலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதம மந்திரியாகப் பதவியேற்ற போதும், சடுதியாக மூன்று தடவை எரிபொருட்களுக்கான விலைகளைக் குறைத்திருந்தார்.