ஜனாதிபதியின் விருப்பத்துக்கு, மங்கள சமரவீர இணக்கம்
அரச ஊடகங்க நிறுவனங்களின் தலைமைப் பதவிக்கு ஜனாதிபதி பிரேரிக்கும் நபர்களை நியமிப்பதற்கு, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இணக்கம் தெரிவித்துள்ளார் என்று, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது அரச ஊடக நிறுவனங்களின் தலைமைப் பதவியில் உள்ளவர்களுக்குப் பதிலாக, ஜனாதிபதி பெயர் குறிப்பிடும் நபர்கள், இதற்கமைய நியமிக்கப்படவுள்ளனர்.
அதற்கிணங்க, ஜனாதிபதி தரப்பில் சிபாரிசு செய்யப்படும் நபர்களின் பெயர்கள், இன்றைய தினம் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.