அமைச்சரவை அந்தஸ்தற்ற, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவியேற்பு: ஹரீசின் அமைச்சில் குழப்பம்
அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள் 03 பேரும், ராஜாங்க அமைச்சர்கள் 17 பேரும், பிரதி அமைச்சர்கள் 07 பேரும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அவர்களின் பெயர்களும் பெற்றுக் கொண்ட அமைச்சு விபரமும் பின்வருமாறு;
அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள்
- ஹர்ஷ டி சில்வா – பொது வழங்கல்கள், பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்
- அஜித் பீ.பெரேரா – டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழிநுட்ப அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்
- சுஜீவ சேமசிங்க – விஞ்ஞான தொழிநுட்ப, ஆராய்ச்சித் துறை அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்
ராஜாங்க அமைச்சர்கள்
01) ரஞ்சன் ராமநாயக்க – நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி ராஜாங் அமைச்சர்
02) விஜயகலா மகேஸ்வரன் – கல்வி ராஜாங்க அமைச்சர்
03) ஜே.சீ.அலவத்துவல – உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர்
04) இரான் விக்ரமரத்ன – நிதி ராஜாங்க அமைச்சர்
05) ரஞ்சன் அலுவிஹார – சுற்றுலா அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர்
06) வசந்த அலுவிஹார – விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் ராஜாங்க அமைச்சர்
07) லக்கி ஜயவர்தன – நகர திட்டமிடல், நீர்வழங்கல் ராஜாங்க அமைச்சர்
08) நிரோஷன் பெரேரா – தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் ராஜாங்க அமைச்சர்
09) ருவன் விஜேவர்தன – பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்
10) சம்பிக்க பிரேமதாச – மின்சக்தி, மீள் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி ராஜாங்க அமைச்சர்
11) அசோக்க அபேசிங்க – போக்குவரத்து சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர்
12) பைசல் காசிம் அவர்கள் – சுகாதார போசனை, சுதேச மருத்துவத்துறை ராஜாங்க அமைச்சர்
13) எச்.எம்.எம். ஹரீஸ் – மாகாண சபைகள், உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர்
14) அமீர் அலி – விவசாய, நீர்ப்பாசன, கிராமிய பொருளாதார அலுவல்கள் ராஜாங்க அமைச்சர்
15) திலிப் வெதஆரச்சி – மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர்16)
16) ஏ.இசட்.எம். செயிட் அலிஸாஹிர் – சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர்
17) வடிவேல் சுரேஷ் – பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர்
பிரதி அமைச்சர்கள்
- அனோமா கமகே – பெற்றோலிய வள அபிருத்தி பிரதி அமைச்சர்
- எட்வட் குணசேகர அவர்கள் – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அலுவல்கள் பிரதி அமைச்சர்
- நளின் பண்டார ஜயமகா அவர்கள் – அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச
- அஜித் மான்னப்பெரும – சுற்றாடல்துறை பிரதி அமைச்சர்
- கருணாரத்ன பரனவிதான– திறன் விருத்தி, தொழிற்பயிற்சி பிரதி
- புத்திக பத்திரன – கைத்தொழில், வாணிப அலுவல்கள் பிரதி
- பாலித குமார தெவரப்பெரும – சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்
ஜே.சீ. அலவத்துவலவுக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் எச்.எம்.எம். ஹரீஸுக்கு வழங்கப்பட்டுள்ள (மாகாண சபைகள், உள்ளூராட்சி) ராஜாங்க அமைச்சுக்களையும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
(அமைச்சர்கள் பற்றிய விபரங்களும் படங்களும்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)