09 மாகாண சபைகளுக்கும், ஒரே நாளில் தேர்தல்: அமைச்சர் வஜிர தெரிவிப்பு

🕔 December 22, 2018

னைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல், ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர், நேற்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை, உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்ற பின்னரே, இந்த தகவலை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“09 மாகாணங்களுக்கும் எந்தவொர காலதாமதமும் இன்றி, ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும்.

தேர்தல்களில் வெற்றிகொள்வதை நோக்காகக் கொண்டு, பொதுமக்களின் சொத்துகளை துஷ்பிரயோகம் செய்து, ஒவ்வொரு மாகாண சபைக்கும் ஒவ்வொரு நாளில் தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. இம்முறை, இக்கலாசாரம் மாற்றப்பட்டே தேர்தல் நடத்தப்படும்.

அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் அதேவேளை, அரசாங்கத்தால் முடிந்தால், ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலை​யும் அதே நாளிலேயே நடத்தலாம்.

இந்த நடவடிக்கை காரணமாக, பாரிய அளவிலான நிதியை சேமிக்க முடியும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்