ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் கட்சியிலேயே உள்ளனர்: சபாநாயகருக்கு அறிவிப்பு

🕔 December 20, 2018

க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள், இன்னும் அந்த கூட்டமைப்பிலேயே அங்கம் வகிக்கின்றனர் என, சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர், இந்த தகவலை எழுத்து மூலம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற அங்கத்துவம் தொடர்பில் சட்டச் சிக்கல்கள் எழுந்தமையினை அடுத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதில் சிக்கல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்