Back to homepage

மேல் மாகாணம்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு சேவை இல்லை: மஹிந்த தேசபிரிய

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு சேவை இல்லை: மஹிந்த தேசபிரிய 0

🕔27.Jul 2020

கொரோனா காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு – முன்னர் திட்டமிடப்பட்டபடி, நடமாடும் வாக்களிப்பு சேவை இடம்பெறாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு ஜூலை 31 ஆம் திகதி வாக்களிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய கூறியுள்ளார். “இருப்பினும், 31ஆம் திகதி திட்டமிட்டபடி அது நடைபெறாது”

மேலும்...
லொக்டவ்ன், ஊரங்கு காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது

லொக்டவ்ன், ஊரங்கு காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது 0

🕔26.Jul 2020

மூன்று மாதங்களுக்கும் மேல் நீடித்த ‘லொக்டவ்ன்’ மற்றும் ஊரடங்கு காலப் பகுதியில் சிறுவர் மீதான கொடுமை மற்றும் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளது என்று, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இந்த வருடம் ஜுலை மாதம் நடுப்பகுதி வரை 5242 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை

மேலும்...
வாக்கெண்ணும் நிலையங்கள், இம்முறை இரு மடங்காக அதிகரிப்பு

வாக்கெண்ணும் நிலையங்கள், இம்முறை இரு மடங்காக அதிகரிப்பு 0

🕔26.Jul 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை 1420 ஆக இருந்தது. ஆனால் இம்முறை சுகாதார வழிகாட்டுதலுக்கு இணங்கவும், முடிவுகளை விரைவாக அறிவிப்பதற்காகவும் வாக்கெண்ணும் நிலையங்களின்

மேலும்...
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு, தொலைபேசி சின்னத்தின் வேட்பாளர்கள், அதிக பணம் செலவிட்டுள்ளனர்: அறிக்கையில் தெரிவிப்பு

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு, தொலைபேசி சின்னத்தின் வேட்பாளர்கள், அதிக பணம் செலவிட்டுள்ளனர்: அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔26.Jul 2020

எதிர்வரும் நாடாSமன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் செலவு செய்த பணம் எவ்வளவு என்பது தொடர்பில் புதுப்பித்த அறிக்கையினை, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் வெளியிட்டுள்ளது. ஜூலை 02 முதல் 15ஆம் திகதி வரையிலான காலத்தை உள்ளடக்கிய செலவுகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின்படி, சமகி ஜன பலவேக (தொலைபேசி சின்னம்) 185

மேலும்...
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விவகாரத்தில், நீதிமன்றம் புதிய உத்தரவு

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விவகாரத்தில், நீதிமன்றம் புதிய உத்தரவு 0

🕔26.Jul 2020

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் 27ஆம் திகதி ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் விடுத்திருந்த உத்தரவில் மாற்றம் செய்து, புதிய உத்தரவொன்றை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய நாளை 27ஆம் திகதி முற்பகல் 09 மணிக்கு வவுனியா இரட்டை பெரியகுளத்தில் அமைந்துள்ள குற்றப் புலனாய்வு திணைக்கள

மேலும்...
குவாஸி நீதிமன்ற முறைமையைக் கலைத்து விடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

குவாஸி நீதிமன்ற முறைமையைக் கலைத்து விடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் 0

🕔24.Jul 2020

குவாஸி நீதிமன்ற முறைமையை கலைத்து விடுமாறும், புர்கா அணியும் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுமாறும் கோரி, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழகமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ‘நாட்டுக்கு விசுவாசமுள்ள குடிமக்கள்’ எனும் அமைப்பு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஆண்களில் பலர், முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா மற்றும் புர்கா

மேலும்...
வாக்குச் சாவடி ஊடாக கொரோனா தொற்று பரவாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி

வாக்குச் சாவடி ஊடாக கொரோனா தொற்று பரவாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி 0

🕔24.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் ஊடாக, கொரோனா தொற்று பரவாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய உறுதியளித்தார். வர்த்தமானி மூலம் சுகாதார அமைச்சு அறிவித்துள்ள சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்கும் போது, கொரோனா பரவல் ஏற்படாது என்று மக்களுக்கு உறுதியளிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை அவர் இதனைத்

மேலும்...
திங்கள் தொடக்கம் மீண்டும் பாடசாலை ஆரம்பம்: 3.30 வரை நடத்திச் செல்லவும் அறிவிப்பு

திங்கள் தொடக்கம் மீண்டும் பாடசாலை ஆரம்பம்: 3.30 வரை நடத்திச் செல்லவும் அறிவிப்பு 0

🕔23.Jul 2020

பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மாலை 3.30 வரை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கற்றல் ஆரம்பிக்கும் வகுப்புகளுக்கான ஆசிரியர்களை தவிர வேறு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வர வேண்டிய அவசியமில்லை என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த விதிகளுக்கான புதிய சுற்றறிக்கையை இன்று அல்லது நாளை வெளியிடவுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள்

மேலும்...
முன்னாள் ராஜாங்க அமைச்சர் பாலித மீது தாக்குதல்: கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பாலித மீது தாக்குதல்: கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Jul 2020

முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி களுத்துறை மாவட்ட வேட்பாளருமான பாலித தெவரப்பெரும மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்துகம – வேகந்தல பிரதேசத்தில் குடிநீர் குழாய் கட்டமைப்பு தொடர்பில் சோதனையிடுவதற்காக பாலித சென்ற சந்தர்ப்பத்தில், ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது தாக்குதலுக்குள்ளான முன்னாள் அமைச்சர் அருகில்

மேலும்...
தற்கொலை தாக்குதல்தாரியின் மனைவி இந்தியாவுக்கு தப்பிச் சென்றது எப்படி: பொலிஸ் அதிகாரி அபூபக்கர் உதவியதாக சாட்சியம்

தற்கொலை தாக்குதல்தாரியின் மனைவி இந்தியாவுக்கு தப்பிச் சென்றது எப்படி: பொலிஸ் அதிகாரி அபூபக்கர் உதவியதாக சாட்சியம் 0

🕔22.Jul 2020

சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதம பொலிஸ் அதிகாரி அபூபக்கர் என்பவர், கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் குண்டு தாக்குதல் நடத்தியவரின் மனைவி சாரா எனப்படும் புலஸ்தினியுடன் ஒரே வாகனத்தில் பயணித்ததை நேரில் கண்ட சாட்சியாளரின் சர்ச்சைக்குரிய அறிவிப்பொன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு தெரியவந்துள்ளது. புலஸ்தினி மகேந்திரன்

மேலும்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு, றிசாட் பதியுதீனுக்கு நீதிமன்றம் கட்டளை

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு, றிசாட் பதியுதீனுக்கு நீதிமன்றம் கட்டளை 0

🕔21.Jul 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் – எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 09 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆஜராக வேண்டுமென கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்

மேலும்...
பணம் தராது விட்டால் வழக்குத் தொடுப்பேன் என அச்சுறுத்தி, லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது

பணம் தராது விட்டால் வழக்குத் தொடுப்பேன் என அச்சுறுத்தி, லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது 0

🕔21.Jul 2020

லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் (எஸ்.ஐ) ஒருவரை லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஹங்வெல்ல – கஹஹேன பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இவர் கைதாகியுள்ளார். மதுபான வர்த்தகர் ஒருவரிடம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அச்சுறுத்தி பணம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
கருணாவை கைது செய்யக் கோரிய மனு: நீதிமன்றம் தள்ளுபடி

கருணாவை கைது செய்யக் கோரிய மனு: நீதிமன்றம் தள்ளுபடி 0

🕔21.Jul 2020

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மானை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை – மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. ஒரே இரவில் மூவாயிரம் ராணுவத்தினரை – தான் புலிகள் அமைப்பில் இருந்த போது கொன்றதாக, அண்மையில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது கருணா அம்மான் தெரிவித்திருந்தார்.

மேலும்...
றிசாட் மீதான விசாரணையைப் பிற்போடுமாறு தேர்தல் ஆணைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒப்பமிட்டு, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

றிசாட் மீதான விசாரணையைப் பிற்போடுமாறு தேர்தல் ஆணைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒப்பமிட்டு, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் 0

🕔20.Jul 2020

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணையினை பிற்போடுமாறும் அல்லது 10. 08. 2020 இன் பின்னர் மேற்கொள்ளுமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் இருவரும் இணைந்து, கையொப்பமிட்டு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். இம்மாதம் 15 ஆம் திகதி இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள்

மேலும்...
சமஷ்டி கோரினால் இரத்த ஆறு ஓடும்: த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் பௌத்த தேரர்கள் விசனம்

சமஷ்டி கோரினால் இரத்த ஆறு ஓடும்: த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் பௌத்த தேரர்கள் விசனம் 0

🕔20.Jul 2020

தமிழர்கள் – சமஷ்டி அதிகாரம் கோரினால் வடக்கு கிழக்கில் ரத்த ஆறு ஓடும் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர், தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். “சமஷ்டி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்