முன்னாள் ராஜாங்க அமைச்சர் பாலித மீது தாக்குதல்: கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

🕔 July 22, 2020

முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி களுத்துறை மாவட்ட வேட்பாளருமான பாலித தெவரப்பெரும மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்துகம – வேகந்தல பிரதேசத்தில் குடிநீர் குழாய் கட்டமைப்பு தொடர்பில் சோதனையிடுவதற்காக பாலித சென்ற சந்தர்ப்பத்தில், ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது தாக்குதலுக்குள்ளான முன்னாள் அமைச்சர் அருகில் உள்ள குழாய்க்குள் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் காலில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் பாலித வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் முன்னாள் அமைச்சர் அவ்விடத்திற்கு சென்று வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவர் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்