தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு சேவை இல்லை: மஹிந்த தேசபிரிய

🕔 July 27, 2020

கொரோனா காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு – முன்னர் திட்டமிடப்பட்டபடி, நடமாடும் வாக்களிப்பு சேவை இடம்பெறாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு ஜூலை 31 ஆம் திகதி வாக்களிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய கூறியுள்ளார்.

“இருப்பினும், 31ஆம் திகதி திட்டமிட்டபடி அது நடைபெறாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கூறினார்.

Comments