கருணாவை கைது செய்யக் கோரிய மனு: நீதிமன்றம் தள்ளுபடி

🕔 July 21, 2020

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மானை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை – மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.

ஒரே இரவில் மூவாயிரம் ராணுவத்தினரை – தான் புலிகள் அமைப்பில் இருந்த போது கொன்றதாக, அண்மையில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது கருணா அம்மான் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருணாவை கைது செய்யுமாறு கோரி, கடுவல நகரசபை உறுப்பினர் பொசத் கலஹபத்திரன எனப்வர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Comments