முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விவகாரத்தில், நீதிமன்றம் புதிய உத்தரவு

🕔 July 26, 2020

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் 27ஆம் திகதி ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் விடுத்திருந்த உத்தரவில் மாற்றம் செய்து, புதிய உத்தரவொன்றை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய நாளை 27ஆம் திகதி முற்பகல் 09 மணிக்கு வவுனியா இரட்டை பெரியகுளத்தில் அமைந்துள்ள குற்றப் புலனாய்வு திணைக்கள அலுகலகத்தில் வாக்குமூலம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைகளுக்கு அழைக்கப்படுவதன் மூலம் பொதுத் தேர்தலுக்கான பிரசாரங்களுக்கு தடையேற்படும் என றிசாட் பதியுதீனுடைய சட்டத்தரணி சுட்டிக்காட்டியமைக்கு அமைய நீதிமன்றம் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டுமென ஏற்கனவே கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவுக்கு முன்னர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு, இரண்டு தடவை அந்த திணைக்களத்தினர் அழைப்பு விடுத்திருந்த போதிலும், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆஜராகவில்லை.

Comments