Back to homepage

பிரதான செய்திகள்

எரிபொருளை விநியோகிக்க ராணுவம் முயற்சி; தடை ஏற்படுத்துகின்றனர் பகிஷ்கரிப்பாளர்கள்: பேச்சாளர் தெரிவிப்பு

எரிபொருளை விநியோகிக்க ராணுவம் முயற்சி; தடை ஏற்படுத்துகின்றனர் பகிஷ்கரிப்பாளர்கள்: பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔26.Jul 2017

பெற்றோலிக் கூட்டுத்தாபன ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினை மீறி, எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பவுசர்களின் டயர்களிலுள்ள காற்றைப் பிடுங்கி,  தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் பவுசர்கள் வெளியேற முடியாத வகையில் வீதிகள் மூடப்பட்டுள்ளதோடு, கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல பகுதியின் நுழைவாயிலில் பாரியளவில் பவுசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
அத்தியவசியமாக்கப்பட்டது எரிபொருள் சேவை; பணிக்கு திரும்பாத பகிஷ்கரிப்பாளர்களின் வேலை பறிபோகும்: அரசாங்கம் அறிவிப்பு

அத்தியவசியமாக்கப்பட்டது எரிபொருள் சேவை; பணிக்கு திரும்பாத பகிஷ்கரிப்பாளர்களின் வேலை பறிபோகும்: அரசாங்கம் அறிவிப்பு 0

🕔26.Jul 2017

எரிபொருளை களஞ்சியப்படுத்துதல் மற்றும் வினியோகித்தல் ஆகியவற்றினை கட்டாய சேவைகளாக அறிவித்து, நேற்று செவ்வாய்கிழமை இரவு, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களை உடனடியாக வேலைக்குத் திரும்புமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. பணிக்குத் திரும்பத் தவறும் இலங்கை பெற்றோலியக்

மேலும்...
தேசியக் கொடியை கழற்றி, மண்ணுக்குள் புதைத்து விட்டு, மாயமான நபர்; வவுனியா மாவட்ட செயலகத்தில் சம்பவம்

தேசியக் கொடியை கழற்றி, மண்ணுக்குள் புதைத்து விட்டு, மாயமான நபர்; வவுனியா மாவட்ட செயலகத்தில் சம்பவம் 0

🕔25.Jul 2017

வவுனியா மாவட்ட செயலகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியினை கழற்றிய நபரொருவர், அதனை மண்ணுக்குள் புதைத்து விட்டுச் சென்ற சம்பவம், இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கறுப்பு வாகனமொன்றில் வந்த நபரொருவர், தேசியக் கொடியைக் கழற்றியெடுத்து மைத்தானத்தில் புதைத்ததாகவும், இதனைத் தாம் தடுப்பதற்கு முயற்சித்த போது, அவர் தப்பிச் சென்று விட்டதாகவும், மாவட்ட

மேலும்...
வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில்; அம்மா, மகனுக்கு அழைப்பு

வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில்; அம்மா, மகனுக்கு அழைப்பு 0

🕔25.Jul 2017

றகர் வீரர் வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவருடைய புதல்வர் யோசித ராஜபக்ஷ ஆகியோருக்கு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யோசித ராஜபக்ஷவின் பெண் நண்பி ஒருவருடன் வசிம் தாஜுத்தீன் உறவு வைத்திருந்ததாகவும், இதன் காரணமாக வசிம்

மேலும்...
‘கறை படியா கரம்’ ஏ.ஆர். மன்சூர் காலமானார்

‘கறை படியா கரம்’ ஏ.ஆர். மன்சூர் காலமானார் 0

🕔25.Jul 2017

– எம்.எஸ்.எம். ஸாகிர் – முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். ஏ.ஆர். மன்சூர் 1933 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி பிறந்தவர். மரணிக்கும் போது அவருக்கு 85 வயது. வர்த்தக மற்றும் கப்பல்துறை முன்னாள் அமைச்சரான ஏ.ஆர். மன்சூர், குவைத்

மேலும்...
பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், நள்ளிரவிலிருந்து வேலை நிறுத்தம்

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், நள்ளிரவிலிருந்து வேலை நிறுத்தம் 0

🕔24.Jul 2017

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம், இன்று திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அச்சங்கம் ஈடுபடவுள்ளது. திருகோணமலையிலுள்ள எரிபொருள் களஞ்சியத்தை இந்தியாவுக்கும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலுள்ள எரிபொருள் களஞ்சியத்தை சீனாவுக்கும் வழங்கும் திட்டத்தை ரத்துச் செய்யுமாறு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம், அரசாங்கத்திடம்

மேலும்...
கொகெய்ன் விவகாரத்துடன் அமைச்சரைத் தொடர்புபடுத்திய, தேரருக்கு எதிராக வழக்கு

கொகெய்ன் விவகாரத்துடன் அமைச்சரைத் தொடர்புபடுத்திய, தேரருக்கு எதிராக வழக்கு 0

🕔24.Jul 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிக்குகள் முன்னணியின் செயலாளர் ஆனந்த சாகர தேரருகே்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சதொச நிறுவனத்தின் ரத்தமலானை களஞ்சியசாலைக்கு ஒறுகொடவத்தையில் இருந்து கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலனில் கொக்கேயின் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்துடன், சதொச நிறுவனத்தையும் தன்னையும் சம்பந்தப்படுத்தி சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு

மேலும்...
வட்டமடுவுக்கு ஹக்கீம் விஜயம்

வட்டமடுவுக்கு ஹக்கீம் விஜயம் 0

🕔24.Jul 2017

– றிசாத்  ஏ காதர் –அம்பாறை மாவட்டம் வட்டமடு பிரதேசத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையிலான உயர் மட்டக் குழுவினர், இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தனர்.பிரதேச விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு, அமைச்சர் இந்த விஜயத்தினை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.வன பரிபாலனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு ஏ.ஆர்.என் முனசிங்க, அம்பாறை

மேலும்...
சவூதி இளவரசர் காத்தான்குடி விஜயம்; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அழைத்துக் கௌரவித்தார்

சவூதி இளவரசர் காத்தான்குடி விஜயம்; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அழைத்துக் கௌரவித்தார் 0

🕔24.Jul 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் – சவூதி அரேபிய நாட்டின் இளவரசரும், முன்னணி முதலீட்டாளருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத், நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில், இவர் இலங்கைக்கு வருகை

மேலும்...
கட்சிகளுக்கிடையிலான அரசியல் போட்டி, முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதில் பாதிப்பை ஏற்படுத்தாது: நஸார் ஹாஜி

கட்சிகளுக்கிடையிலான அரசியல் போட்டி, முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதில் பாதிப்பை ஏற்படுத்தாது: நஸார் ஹாஜி 0

🕔24.Jul 2017

– அஹமட் – முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள கட்சிகளுக்கிடையிலான அரசியல் போட்டி நடவடிக்கைகள்; முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதில், பாதகமான தாக்கங்கள் எவற்றினையும் ஏற்படுத்த மாட்டாது என்று, முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், முஸ்லிம் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்காக முன்னின்று உழைப்பவர்களில் ஒருவருமான நஸார் ஹாஜி நம்பிக்கை தெரிவித்தார். முஸ்லிம் கூட்டமைப்பில்

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள அமைச்சர்கள், பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு

அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள அமைச்சர்கள், பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு 0

🕔24.Jul 2017

அரசாங்கத்திலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ள ஏழு பேர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கம்பஹாவில் ரகசியமாகச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. இவ்வாறு ரகசிய சந்திப்பில் ஈடுபட்டவர்களில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 05 அமைச்சர்களும், 02 பிரதியமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர் எனக் கூறப்படுகிறது. இச்சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. மேற்படி 07 பேரும் முன்னாள் அமைச்சர் பசில்

மேலும்...
அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை கைப்பற்ற, புல்லுருவிகள் முயற்சிப்பு: தலைவர் லோகநாதன்

அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை கைப்பற்ற, புல்லுருவிகள் முயற்சிப்பு: தலைவர் லோகநாதன் 0

🕔23.Jul 2017

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை கையகப்படுத்துகின்ற முன்னெடுப்பு மற்றும் முயற்சிகளில் புல்லுருவிகள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்று சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஆனாலும், இவ்வாறானவர்களின் அடாவடி ஒருபோதும் வெற்றி அளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று

மேலும்...
பொத்துவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்; ஜௌபரின் முயற்சியினால் அரபு நாட்டவர் அன்பளிப்பு

பொத்துவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்; ஜௌபரின் முயற்சியினால் அரபு நாட்டவர் அன்பளிப்பு 0

🕔23.Jul 2017

– முஸ்ஸப் – பொத்துவில் பிரதேசத்திலுள்ள கஷ்டப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் மற்றும் குடை ஆகியவற்றினை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் இடம்பெற்றன. ஐக்கிய அரபு ராஜியத்தைச் சேர்ந்த விமானி அஹமட் அல்தாயி என்பவரின் சொந்த நிதியிலிருந்து, மேற்படி பொருட்கள் கொள்ளவனவு செய்யப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின்

மேலும்...
பதினேழு வருட விசுவாசம்: உயிரைக் கொடுத்து இளஞ்செழியனைக் காப்பாற்றிய, சார்ஜன் ஹேமசந்திர

பதினேழு வருட விசுவாசம்: உயிரைக் கொடுத்து இளஞ்செழியனைக் காப்பாற்றிய, சார்ஜன் ஹேமசந்திர 0

🕔23.Jul 2017

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின் போது காயப்பட்டு உயிரிழந்த, நீதிபதியின் மெய்பாதுகாவலர், சார்ஜன் ஹேமசந்திர எனும் சிங்கள சகோதரராவார். இவர் நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலராக 17 வருடங்கள் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. நல்லூரில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இவருடைய வயிற்றுப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, உடலின் உட்புறத்தில் அதீத

மேலும்...
நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூடு;  இருவர் கைது

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூடு; இருவர் கைது 0

🕔23.Jul 2017

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இளஞ்செழியனின் பாதுகாப்பு பொலிஸார் மீது நேற்று சனிக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது காயமடைந்த, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இளஞ்செழியன் தனது வாகனத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்