அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை கைப்பற்ற, புல்லுருவிகள் முயற்சிப்பு: தலைவர் லோகநாதன்

🕔 July 23, 2017

கில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை கையகப்படுத்துகின்ற முன்னெடுப்பு மற்றும் முயற்சிகளில் புல்லுருவிகள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்று சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஆனாலும், இவ்வாறானவர்களின் அடாவடி ஒருபோதும் வெற்றி அளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு பேசியபோதே, மேற்கண்ட விடயங்களை அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

சங்க யாப்பின் பிரகாரம் உறுப்புரிமையை இழந்த நபர்களின் நடவடிக்கைகள், சட்ட வலுவற்றவை என்றும் செல்லுபடியற்றை என்றும் சுட்டிக்காட்டினார்.

கடந்த 25 வருடங்களாக  – தான் கட்டி காத்த சங்கத்தில் இருந்து, தன்னை வெட்டி வீழ்த்துகின்றமையை சங்க உறுப்பினர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும், அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அதிருப்தி குழுவினருக்கு பின்னால், அரசியல் கட்சி ஒன்று உள்ளது என்றும், அத்துணிவிலேயே இவர்கள் இயங்குவதுடன் மிரட்டல்கள் விடுக்கின்றனர் எனவும் சொன்னார்.

இருப்பினும் அதிருப்தி குழுவினரின் பிரச்சினைகளை செவிமடுப்பதற்கு இன்னமும் தான் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவருக்கு எதிராக முறைப்பாடு; முகாமைத்துவ சபையை கூட்டுமாறும் கோரிக்கை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்