பதினேழு வருட விசுவாசம்: உயிரைக் கொடுத்து இளஞ்செழியனைக் காப்பாற்றிய, சார்ஜன் ஹேமசந்திர

🕔 July 23, 2017

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின் போது காயப்பட்டு உயிரிழந்த, நீதிபதியின் மெய்பாதுகாவலர், சார்ஜன் ஹேமசந்திர எனும் சிங்கள சகோதரராவார்.

இவர் நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலராக 17 வருடங்கள் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூரில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இவருடைய வயிற்றுப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக, உடலின் உட்புறத்தில் அதீத இரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே மரணம் நிகழ்ந்துள்ளதாக பிரேத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவருக்கு 57 வயதாகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்