Back to homepage

பிரதான செய்திகள்

பிரதமர் பதவியை பின் கதவு வழியாகப் பெற்றுக் கொள்ள மாட்டேன்: கரு ஜயசூரிய

பிரதமர் பதவியை பின் கதவு வழியாகப் பெற்றுக் கொள்ள மாட்டேன்: கரு ஜயசூரிய 0

🕔15.Feb 2018

பிரதம மந்திரி பதவியையோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தினையோ பின் கதவு வழியாக, தான் ஒருபோதும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஆங்கில ஊடகமொன்றுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்கே, தான் விரும்புவதாகவும், தனது கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை குறைத்து மதிப்படும் எண்ணம் தனக்கு இல்லை என்றும்

மேலும்...
அமைச்சரவையில் இந்த வாரம் மாற்றம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

அமைச்சரவையில் இந்த வாரம் மாற்றம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔15.Feb 2018

அமைச்சரவையில் இந்த வாரத்தில்  மாற்றம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற போதே, அவர் இதனைக் கூறினார். எவ்வாறாயினும் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய நல்லாட்சி தொடரும் என்றும் அவர் இதன் போது உறுதிபடத்

மேலும்...
இ.தொ.கா. தலைவர் முத்து சிவலிங்கம், பிரதிமைச்சராக சத்தியப் பிரமாணம்

இ.தொ.கா. தலைவர் முத்து சிவலிங்கம், பிரதிமைச்சராக சத்தியப் பிரமாணம் 0

🕔15.Feb 2018

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், சிறிய மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், முத்து சிவலிங்கம் இன்று சத்தி வியாழக்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின்

மேலும்...
பாலித ரங்கே பண்டார ராஜிநாமா

பாலித ரங்கே பண்டார ராஜிநாமா 0

🕔15.Feb 2018

நீர்ப்பாசன ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்து வந்த, ஆனமடுவ அமைப்பாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நலனுக்காக தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வதற்கு தயாராகவுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும்...
எனது மகனை கைது செய்தவர்களை, நான் பார்த்துக் கொள்கிறேன்: மஹிந்த ராஜபக்ஷ

எனது மகனை கைது செய்தவர்களை, நான் பார்த்துக் கொள்கிறேன்: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔15.Feb 2018

பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுபடுத்தி அரசாங்கமொன்றினை அமைக்கும் பொருட்டு நாடாளுமன் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அண்மையில் சந்தித்துள்ளது. இந்த குழுவில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் இருந்துள்ளனர். ஜனாதிபதியுடன்

மேலும்...
நல்லாட்சி அரசாங்கத்தைத் தொடர்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்: செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு

நல்லாட்சி அரசாங்கத்தைத் தொடர்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்: செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு 0

🕔15.Feb 2018

தேசிய அரசாங்கத்தை தொடர்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக, அந்தக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் இன்று வியாழக்கிழமை  தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை அலறி மாளிகையில் சந்தித்து, தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து பேசினர். இதனையடுத்தே இந்த முடிவு எட்டப்பட்டது. பிரதமர்

மேலும்...
நிமல் பிரதம மந்திரி; சமல் சபாநாயகர்: புதிய அரசாங்கத்துக்கு சிபாரிசு

நிமல் பிரதம மந்திரி; சமல் சபாநாயகர்: புதிய அரசாங்கத்துக்கு சிபாரிசு 0

🕔15.Feb 2018

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை, புதிய பிரதமராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிய அரசாங்கத்தை அமைத்து, அதில் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதம மந்திரியாக நியமிப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
பெண் பிரதிநிதிகளை பெறுவதில் சிக்கல்; சட்டத்தை திருத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய

பெண் பிரதிநிதிகளை பெறுவதில் சிக்கல்; சட்டத்தை திருத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔15.Feb 2018

உள்ளூர் சபைகளில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் நிலவுவதால், குறித்த சட்டத்தில் திருந்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்ட விடயத்தை ஆணையாளர்

மேலும்...
உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு; ஒவ்வொரு மாதமும் 18 கோடி 28 லட்சம் ரூபாய் தேவை

உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு; ஒவ்வொரு மாதமும் 18 கோடி 28 லட்சம் ரூபாய் தேவை 0

🕔14.Feb 2018

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8325 உறுப்பினர்களுக்கும் மாதாந்தக் கொடுப்பனவாக,  18 கோடி 28 லட்சம் ரூபாவினை அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளது. மாநகர முதல்வருக்கு 30,000  ரூபாவும், மாநகர பிரதி முதல்வருக்கு 25,000 ரூபாவும் மாநகர சபை உறுப்பினருக்கு ரூபா 20,000 ரூபாவும் மாதாந்தக் கொடுப்பனவாக வழங்க வேண்டும். அதேவேளை, நகரசபை தவிசாளருக்கு

மேலும்...
மாயாஜாலம்

மாயாஜாலம் 0

🕔14.Feb 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு மாயாஜாலம் போலவே, உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் புதிய முறைமை, இன்னும் பலருக்குத் தெரிந்து கொண்டிருக்கிறது. ஒரு சபையில், அதிக வட்டாரங்களை வென்ற கட்சிக்கும் அதே சபையில் ஒரு வட்டாரத்தை மட்டும் வெற்றிகொண்ட கட்சிக்கும், இறுதியில் ஒரே தொகை உறுப்பினர்கள் கிடைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட முக்கால்வாசி வட்டாரங்களில் வெற்றிபெற்ற கட்சிக்கு, அந்த

மேலும்...
சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமியுங்கள்; ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை

சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமியுங்கள்; ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை 0

🕔14.Feb 2018

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய  அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இணைந்து இந்த

மேலும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மு.காங்கிரஸ் ஆட்சிமைப்பதில் இணக்கம்: மு.கா. ஊடகப் பிரிவு தெரிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மு.காங்கிரஸ் ஆட்சிமைப்பதில் இணக்கம்: மு.கா. ஊடகப் பிரிவு தெரிவிப்பு 0

🕔14.Feb 2018

– அஹமட் – உள்ளுராட்சி சபைகள் சிலவற்றில் கூட்டாட்சி அமைக்கும் பொருட்டு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தைகளை நடத்தி, கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக, முஸ்லிம் காங்கிரசின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் காலங்களில் இதற்கான மேலதிக பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனவும் அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்...
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையே, ஐ.தே.க.வின் வாக்கு வீழ்ச்சிக்கு காரணமாம்: அமைச்சர் மாரப்பன தெரிவிப்பு

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையே, ஐ.தே.க.வின் வாக்கு வீழ்ச்சிக்கு காரணமாம்: அமைச்சர் மாரப்பன தெரிவிப்பு 0

🕔14.Feb 2018

தேசிய கீதம் தமிழில் பாடப்பட்ட ஒவ்வொரு தடவையும் 50 ஆயிரம் பௌத்த, சிங்கள வாக்குளை ஐக்கிய தேசியக் கட்சி இழக்கின்றது என்று,  வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற, ஐ.தே.கட்சியின் உயர் மட்டக் கூட்டத்திலேயே, அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார் எனவும் அந்த ஊடகம்

மேலும்...
நாட்டின் அரசியல் தலைகீழாக புரளும் நிலை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியே கவலைப்படுமளவுக்கு நிலைமை மாறியுள்ளது: ஹக்கீம்

நாட்டின் அரசியல் தலைகீழாக புரளும் நிலை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியே கவலைப்படுமளவுக்கு நிலைமை மாறியுள்ளது: ஹக்கீம் 0

🕔14.Feb 2018

தேசிய அரசியலில் பாரிய மாற்றங்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.புதிய தேர்தல் முறையில் தமது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். மாகாண சபை தேர்தலில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். தங்களின் தோல்வி குறித்து தேசிய கட்சிகள் தங்களுக்குள் விரல் சுட்டுகின்‌றனர். இந்நிலையில்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராகிரார் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராகிரார் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை 0

🕔14.Feb 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அரசியலரங்கில் ஏற்பட்டுள்ளன. அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய காங்கிரசும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைப்பதற்கு இணக்கம் கண்டுள்ள நிலையிலேயே, அந்த சபையின் தவிசாளராக உதுமாலெப்பையை நியமிப்பதற்கு இணக்கம் காணப்படுள்ளதாக அறிய முடிகிறது. தேசிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்