இ.தொ.கா. தலைவர் முத்து சிவலிங்கம், பிரதிமைச்சராக சத்தியப் பிரமாணம்

🕔 February 15, 2018

லங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், சிறிய மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், முத்து சிவலிங்கம் இன்று சத்தி வியாழக்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவும் சமூகமளித்திருந்தார்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்