சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமியுங்கள்; ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை

🕔 February 14, 2018

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய  அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை இன்று புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டதாக, சுதந்திரக் கட்சியின் ஊடகக் குழு செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை, பிரதம மந்திரி பதவியிலிருந்து நீக்குமாறு, ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையிலேயே, மேற்படி எழுத்து மூல கோரிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியைக் கொண்ட அரசாங்கமொன்றினை உருவாக்குமாறு, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்