பெண் பிரதிநிதிகளை பெறுவதில் சிக்கல்; சட்டத்தை திருத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய

🕔 February 15, 2018

ள்ளூர் சபைகளில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் நிலவுவதால், குறித்த சட்டத்தில் திருந்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போதே, மேற்கண்ட விடயத்தை ஆணையாளர் கூறினார்.

“உள்ளுராட்சி சபைகளுக்கு 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள முறைப்படி அது சிக்கலான விடயமாக மாறியுள்ளது.

இந்த நிலமையின் காரணமாக, குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்” என, அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்