உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு; ஒவ்வொரு மாதமும் 18 கோடி 28 லட்சம் ரூபாய் தேவை

🕔 February 14, 2018

டைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8325 உறுப்பினர்களுக்கும் மாதாந்தக் கொடுப்பனவாக,  18 கோடி 28 லட்சம் ரூபாவினை அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளது.

மாநகர முதல்வருக்கு 30,000  ரூபாவும், மாநகர பிரதி முதல்வருக்கு 25,000 ரூபாவும் மாநகர சபை உறுப்பினருக்கு ரூபா 20,000 ரூபாவும் மாதாந்தக் கொடுப்பனவாக வழங்க வேண்டும்.

அதேவேளை, நகரசபை தவிசாளருக்கு 25,000 ரூபாவும், பிரதித் தவிசாளருக்கு 20,000 ரூபாவும், நகர சபை உறுப்பினருக்கு 15,000 ரூபாவும் மாதாந்தக் கொடுப்பனவாக வழங்கப்பட வேண்டியுள்ளது.

அதேபோன்று பிரதேச தவிசாளருக்கு 25, 000 ரூபாவும் , பிரதித் தவிசாளருக்கு 20,000 ரூபாவும், பிரதேச சபை உறுப்பினருக்கு 15,000 ரூபாவும் மாதாந்தப் படியாக அரசாங்கம் வழங்க வேண்டும்.

ஆயினும், இக் கொடுப்பனவைப் பின்வரும் சந்தர்ப்பங்களில் உரிமை கோர முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

(1 ) கொடுப்பனவுக்குரிய மாதத்தில் மாதாந்த சபைக் கூட்டங்களில் / செயற்குழுக் கூட்டங்களில் எவற்றிலும் பங்கேற்காதிருத்தல்.

(2) சம்பந்தப்பட்ட உறுப்பினர் குற்றச் செயலின் பேரில் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் இருத்தல்

(3) குறித்த சபையின் நடவடிக்கைகளும் பணிகளும் சட்டத்தின் பிரகாரம் இடைநிறுத்தப்பட்டிருந்தல்.

(நன்றி: மாஹிர் அஸனார்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்